காவலரின் அர்ப்பணிப்புக்கும் தைரியத்துக்கும் நான் தலைவணங்குகிறேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.விஎஸ்.லக்ஷ்மண் பாராட்டியுள்ளார்.
மழை வெள்ளத்தில் போலீஸ் கான்ஸ்டெபிள் ஒருவர் இரண்டு குழந்தைகள் தோளில் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.