காவலரின் அர்ப்பணிப்புக்கும் தைரியத்துக்கும் நான் தலைவணங்குகிறேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.விஎஸ்.லக்ஷ்மண் பாராட்டியுள்ளார்.
மழை வெள்ளத்தில் போலீஸ் கான்ஸ்டெபிள் ஒருவர் இரண்டு குழந்தைகள் தோளில் சுமந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது. குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விளை நிலங்கள், கட்டடங்கள் ஆகியவை மழை நீரால் சூழ்ந்து காணப்படுகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பத்திரமான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும்போது காவலர் ஒருவர் இரண்டு குழந்தைகளைத் தோளில் சுமந்துகொண்டு ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார். இடுப்பளவு தண்ணீரில் இரண்டு சிறுமிகளைத் தோளில் சுமந்து செல்லும் வீடியோ சமுக வலைதளத்தில் பரவியதையடுத்து காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிறுமிகளைத் தோளில் சுமந்துகொண்டு சென்ற காவலர் பெயர் பிருத்விராஜ்சிங் ஜடேஜா என்பது தெரியவந்துள்ளது.

அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மண், ``குஜராத்தின் கல்யான்பூர் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளைக் காவலர் ப்ரித்வி ராஜ்சிங் ஜடேஜா தோளில் சுமந்து சென்றுது எவ்வளவு நெகிழ்ச்சியான வீடியோ. அவரது அர்ப்பணிப்புக்கும், தைரியத்துக்கும் நான் தலைவணங்குகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval