* தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் (வெள்ளிக்கிழமை) தனது நடைபயணத்தை தொடங்கினார். மு.க.ஸ்டாலின், நல்லகண்ணு, வைகோ, ஈவிகேஎஸ் இளங்கோவன், சரத்குமார் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து நடைபயணத்தை தொடங்கிவைத்தனர்.