விடியற்காலை,...ஆந்திர நர்ஸிப்பட்ணத்தில் இருந்து லம்பாசிங்கி எனும் ஊருக்கு போகும் வழியில், ஒரு கிராமத்தில் ஒரு குடிசை டீக்கடையில், காலை உணவுக்காக என் பைக்கை நிறுத்தினேன். மெயின் ரோடை ஒட்டியிருந்த அந்தக் குடிசையின் வெளியெ ஒரு டேபிள் போட்டு, அதில் ஒரு வயதானவர் டீ போட்டுக் கொண்டிருந்தார்.
"ஒரு கப் டீ,... கூட எதாவது சாப்பிடக் குடுங்க..."
அந்த முதியவர் டீ போடும் பாத்திரத்தைக் காட்டி, ஏதோ சொன்னார். எனக்கு அவர் பேசிய பாஷை தெரியாது. நான், சாப்பிட எதாவது வேண்டும் என்று சைகையால் எனக்குத் தெரிந்த அளவில் காட்டினேன்.