Showing posts with label துபாயில் தீ விபத்து!. Show all posts
Showing posts with label துபாயில் தீ விபத்து!. Show all posts

Thursday, December 31, 2015

துபாயில் தீ விபத்து!

புத்தாண்டு கொண்டாட்டம் விபரீதம் ஆனது.
சற்றுநேரத்திற்கு முன்பு துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலிபா அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.அப்போது 20-வது மாடியில் இருந்து திடீரென தீ குபுகுபுவென பற்றி எரிந்தது. இந்த தீ விடுதியின் அனைத்து தளங்களுக்கும் பரவியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.