மத்திய அரசு துவக்கி வைத்த, பிராந்திய இணைப்பு திட்டத்தில், தமிழகத்தின் தஞ்சாவூர் சேர்க்கப்பட்டு உள்ளதால், அங்கு, விமான நிலையம் அமையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
நாடு முழுவதும், முக்கிய பிராந்தியங்களை விமான சேவை மூலம் இணைக்கும் திட்டத்தை, டில்லியில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு துவக்கி வைத்தார்.