மத்திய அரசு துவக்கி வைத்த, பிராந்திய இணைப்பு திட்டத்தில், தமிழகத்தின் தஞ்சாவூர் சேர்க்கப்பட்டு உள்ளதால், அங்கு, விமான நிலையம் அமையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
நாடு முழுவதும், முக்கிய பிராந்தியங்களை விமான சேவை மூலம் இணைக்கும் திட்டத்தை, டில்லியில், விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் பங்கேற்கும், தனியார் விமான சேவை நிறுவனங்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ஆறு வார அவகாசம் தரப்பட்டு உள்ளது. அடுத்த மூன்று நாட்களில், அவை தொடர்பாக, விமான போக்குரவத்து துறை முடிவெடுக்கும். இது தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற, விமான போக்குவரத்து செயலர், ஆர்.என்.சூபே கூறியதாவது:
பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தின் கலாசார நகரங்களில் ஒன்றான, தஞ்சாவூர் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன்படி, தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்கப்படும். இதற்கு, அங்குள்ள விமானப்படை தளம் ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval