புதுடெல்லி,
இதய நோயாளிகளின் உயிரைக் காப்பதற்கு அறுவை சிகிச்சை செய்து குழாய் வடிவத்திலான ‘கரோனரி ஸ்டென்டு’ பொருத்துவது வழக்கம். இதன் விலை அதிகமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் அதன் விலையை 85 சதவீத அளவுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ‘பி.எம்.எஸ்.’ என்றழைக்கப்படுகிற வெறும் உலோக ஸ்டென்டு சில்லரை விலை ரூ.7 ஆயிரத்து 623 ஆக இருக்கும். மருந்துகளில் கழுவி எடுத்த டி.இ.எஸ். ஸ்டென்டு விலை ரூ.31 ஆயிரத்து 80 ஆக இருக்கும்.
இதில் மதிப்பு கூட்டிய வரி, உள்ளூர் வரிகள் அடங்கும்.
இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்த தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி அனந்த குமார் வெளியிட்டார்.
இதுவரை பி.எம்.எஸ். ஸ்டென்டு விலை ரூ.45 ஆயிரம் ஆகவும், டி.இ.எஸ். ஸ்டென்டு விலை ரூ. 1 லட்சத்து 21 ஆயிரம் ஆகவும் இருந்து வந்தது.
விலை குறைப்பு தொடர்பாக ஸ்டென்டுகளை தயாரித்து அளிக்கிற நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசின் இந்த விலை குறைப்பு நடவடிக்கை, இதய நோயாளிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
--தினத்தந்தி

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval