Tuesday, February 14, 2017

தியாகத்தின் பெயர் பெண்மை !!!

பாத்திமா... 
ஓமானில் வசிக்கும் கேரளா முஸ்லிம் குடும்பங்களில் ஒன்றான தலச்சேரி முழுப்பிலங்காடு முகைதீன் - ஜமீலா தம்பதிகளின் மூத்த மகள் பாத்திமா. ஓமான் இக்ரா இந்தியன் ஸ்கூலில் ஆசிரியையாக பணி புரிவதோடு மலையாளத்தில் மிகச்சிறந்த பெண் கவிஞர்.
மலப்புரம் மாவட்டம் கோட்டகுன்று அப்பாஸ் - ஆபிதா தம்பதிகளின் மூத்த மகன் ஜாஸ்பர். ஆறாம் வகுப்பு படிக்கும் போது Spinal Muscular Attrophy நோய் பாதித்து இடுப்புக்கு கீழே உணர்வின்றி உறவுகளின் துணையின்றி வாழ்பவர். தனது ஊனத்தை மறக்க பிரஸ் பிடித்து வரையத் துவங்கிய ஜாஸ்பர் மிகச் சிறந்த ஓவியர் என்பதோடு தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ GREEN PALLAIATIVE என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இருவரும் தங்களது திறமைகளில் பிரபலங்கள் என்பதால் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு ஏற்பட்டு பின்னர் ஒரு இனம் புரியாத காதலாக மாறியது.
பாத்திமா ஜாஸ்பரை நிக்காஹ் செய்ய விருப்பம் தெரிவித்த போது குடும்பத்தினர் முதலில் மறுத்த போதும் மகளது பிடிவாதத்தின் முன்பு பெற்றோர் வேறு வழியின்றி சம்மதித்தனர்.
வெறும் உடல் சுகத்தையும் கடந்து மனதாலும் நேசித்து வாழமுடியும் என்பதற்கு பாத்திமாவின் தியாக மனப்பான்மை ஒரு உதாரணம்.
தற்போது தனது கணவரோடு இணைந்து Wheelchair Friendly State என்ற புதிய பார்வையோடு பயணத்தை துவங்கியுள்ளார்...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval