Thursday, February 23, 2017

​இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள் February 23, 2017


​இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள்கேரள கர்நாடக எல்லையில், படனே கிராமத்தில், மத ஒருமைப்பாட்டுக்கான ஒரு மைல்கல்லை உருவாக்கியுள்ளனர் மக்கள். இஸ்லாமிய சமூகத்தினர் நடத்தும் தொழுகை மட்டும் அவர்களின் ஒன்றுகூடலுக்காக இந்துக் கோவில் சுற்றுச்சுவரை இடித்து நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளனர் கிராம மக்கள்.


சில நாட்களுக்கு முன்பு தலைப்புச் செய்திகளில் தவறான காரணங்களுக்காக இடம்பெற்றது தான் இந்த படனே கிராமம். ஐ.எஸ் முகாமில் சேர்ந்த 12 பேர் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் செய்தி வெளியானது. ஆனால் இந்த கிராம மக்கள் தாங்கள் எந்த மதத் தீவிரவாதத்திற்கும் இரையாகவில்லை, பொதுப்பார்வை தங்களை பாதிக்கவில்லை என்னும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 18 மற்றும் 19-ஆம் தேதி நடக்கவிருந்த கூட்டத்திற்காக ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் உள்ளூர் தலைவர் பஷீர் சிவபுரம், கோவில் சுற்றுச்சுவரால், கூட்டத்தை நடத்துவதற்கான இடம் குறைவதைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான கடிதத்தை கோவில் நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து பஷீர் சிவபுரம் பேசுகையில், ”இரு சமூகத்தினர் இடையிலான அன்பையும், சகோதரத்துவத்தையும் இந்த செயல்பாடு காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகக் குழு சுற்றுச்சுவரை இடித்து, இஸ்லாமிய அமைப்பின் கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதியை அளித்துள்ளது.

இதுகுறித்து கோவில் கமிட்டி செயலர் சுரேஷ் மம்படி கூறியபோது, ”ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் கோரியபோது, எங்களுக்கும், கிராம மக்களுக்கும் எந்தவித அமைப்பும் இருக்கவில்லை. கிராமத்தில் மத ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை காப்பதற்காக நாங்கள் இதை சடங்காக மேற்கொள்ளவிருக்கிறோம்” என்று கூறினார்.
courtesy;News7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval