Wednesday, February 15, 2017

முதல்முறையாக துபாயில் அறிமுகமாகும் பறக்கும் கார் டாக்சி!


துபாயில் அறிமுகமாகும் பறக்கும் டாக்சி...!!துபாயில் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பறக்கும் டாக்சி கார்கள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
உலகின் சிறந்த சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விளங்கும் துபாய்
நவீன போக்குவரத்து சாதனங்களை இயக்குவதற்கு அதீத ஆர்வம் காட்டி வருகிறது. அண்மையில் ஹைப்பர்லூப் ஒன் என்ற அதிவேக போக்குவரத்து சாதன கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளிலும், டிரைவரில்லாமல் இயங்கும் மினி பஸ்சை இயக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பறக்கும் வாடகை கார்களை அறிமுகம் செய்வதற்கு அந்நாட்டு போக்குவரத்து துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பைலட் இல்லாமல் இயங்கும் பறக்கும் கார்களை துபாய் போக்குவரத்து ஆணையம் சோதனை செய்துள்ளது. வரும் ஜூலை மாதத்தில் இருந்து இந்த பறக்கும் வாடகை கார்களை சேவைக்கு அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. துபாய் நகரிலுள்ள முக்கியப் பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்று அடையவும், புதுமையான பயண அனுபவத்தை பெறும் வகையில் இந்த பறக்கும் டாக்சி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

துபாயில் அறிமுகமாகும் பறக்கும் டாக்சி...!!துபாயில் அறிமுகமாகும் பறக்கும் டாக்சி...!!
சீனாவில் தயாரிக்கப்பட்ட இ-ஹேங் 184 என்ற பறக்கும் காரின் புரோட்டோடைப் மாடல்களை துபாய் போக்குவரத்து ஆணையம் சமீபத்தில் சோதனை செய்துள்ளது. மணிக்கு 100 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் வாய்ந்ததாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும். பேட்டரியில் இயங்கும் மின்சார பறக்கும் காராக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 2 மணிநேரம் பிடிக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் அரை மணிநேரம் வானில் பறக்கும். இந்த பறக்கும் காருக்கு தனி ஓட்டுனர் தேவையில்லை. தானாக மேல் எழும்பி பறக்கும். அதேபோன்று, தானாகவே சரியான இடத்தில் தரை இறங்கிவிடும். கம்ப்யூட்டர் புரோகிராம் செய்யப்பட்டு இருப்பதால், எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை இந்த பறக்கும் காரில் உள்ள திரையில் தேர்வு செய்தால் போதுமானது. செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு இறக்கிவிட்டு விடும். அதேநேரத்தில், தரைக் கட்டுப்பாட்டு மையம் மூலமாக, பறக்கும் காரின் வழித்தடம், வேகம், இறங்கும் இடம் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். ஹோவர் டாக்சி என்று குறிப்பிடப்படும் இந்த பறக்கும் காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 8 சிறிய புரொப்பல்லர்கள் மூலமாக இயங்குகிறது. இந்த பறக்கும் காரில் உயர் வகை சென்சார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிக வெப்பநிலை உள்பட எந்தவொரு சீதோஷ்ண நிலையிலும் மிகச் சிறப்பாக செயல்படும். வரும் ஜூலை மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக துபாய் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் மத்தார் அல் தயர் தெரிவித்துள்ளார். இது நிச்சயமாக துபாய் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயனுள்ளதாகவும், ஈர்க்கும் போக்குவரத்து சாதனமாக இருக்கும். புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு காரின் படங்கள்! விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.
துபாயில் அறிமுகமாகும் பறக்கும் டாக்சி...!!துபாயில் அறிமுகமாகும் பறக்கும் டாக்சி...!!















No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval