Thursday, February 2, 2017

மதுரை ஆட்சியர், மேலூர் வட்டாட்சியருக்கு 6 வாரம் சிறை


மதுரை ஆட்சியர், மேலூர் வட்டாட்சியருக்கு 6 வாரம் சிறைசென்னை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் வட்டாட்சியர் ஆகியோரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்க மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை சேர்ந்த உசேன் முகமது அவரது சகோதரர் ஜவஹர் அலி ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பிரித்து கொடுக்குமாறு கடந்த 2004-ஆம் ஆண்டில் மேலூர் வட்டாட்சியர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகியுள்ளனர். 

ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காததால் மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மேலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், மதுரை உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடியுள்ளனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். 

இதனையடுத்து கடந்த 2014-ல் நிலத்தை பிரித்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மனுதாரர்கள் தரப்பில், மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிபதி, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் வட்டாட்சியர் ஆகியோரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்கவும், அவர்களது வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். 
courtesy;News7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval