
இந்த தொகை டிஸ்ட்ரிபுயுட்டரின் இடத்திலிருந்து நம் வீடு வரையிலான டெலிவரி, அதை கையாளும் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதற்கான காப்பீடு, வரிகள், ஏஜன்சிக்கான கமிஷன் தொகை அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும்.
ஆனால், நீங்கள் இந்த சிலிண்டர்களை எவ்வளவு கொடுத்து வாங்குகிறார்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மேலே குறிப்பிட்ட தொகைக்கு மேல் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் யாருக்கு போகிறது என்பது கீழே உள்ள கணக்கீடை பார்த்தால் புரியும்.
உதாரணமாக, 553 ரூபாய் கொடுக்க வேண்டிய சிலிண்டருக்கு, நீங்கள் 600 ரூபாய் கொடுத்து வாங்கினால் ரூபாய் 47 அதிகம் கொடுத்து வாங்குகிறீர்கள். ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 47, ஒரு நாளைக்கு ஒரு ஏஜன்சி குறைந்தது 1000 சிலிண்டர்களை டெலிவரி செய்வதாக வைத்துக்கொண்டால், அந்த ஏஜன்சியின்ஒருநாள் வருவாய் ரூபாய் 47000.மாத வருவாய் ரூபாய் 1410000/- ஆண்டு வருவாய் ரூபாய் 16920000/-.
நாம் ஒவ்வொரு நபரும் உபரியாக கொடுக்கும் தொகை ஒரு கோடிக்கு மேல். இனிமேல் சரியான தொகை கொடுத்து வாங்குவீர். இந்த விவரங்கள் அனைத்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் மன்ற கூட்டத்தில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியவை.
இது குறித்து புகார் தெரிவிக்க 1800224344 என்ற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது உங்கள் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval