
ஒவ்வோர் ஆண்டும் 11 முதல் 12 லட்சம் புற்றுநோயாளிகள் கண் டறியப்படுகின்றனர். அவர்களில் 6 முதல் 7 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர். சுமார் 25 லட்சம் பேர் புற்றுநோயுடன் வாழ்கின்றனர்.
*விழிப்புணர்வு தேவை*
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பது முற்றிலுமாக குணப்படுத்த வழிவகை செய்யும். அதற்கு, மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் அவசியம்.
பெண்கள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல, ஆண்கள் தொண்டைக் குழாய் புற்றுநோய் உள்ளிட்ட வற்றால் பாதிக்கப் படுகின்றனர்.
பேசும்போதும், உணவு சாப்பிடும்போதும் சிரமம் ஏற்படுவது, மரு அல்லது மச்சம் பெரிதாவது, வலி ஏற்படுவது, மலம், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவது, நீண்ட நாட்களாக இருமல் நீடிப்பது, உடல் எடை திடீரெனக் குறைவது உள்ளிட்டவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, மருத்துவர்களை அணுகி, பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
பெற்றோர் அல்லது முன்னோர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்திருந்தால், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறியலாம்.
*பாப்சிமியர் பரிசோதனை*
திருமணமான பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது பாப்சிமியர் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
புற்றுநோயைப் பொருத்தவரை நோயாளியின் தன்மை, நோயின் தீவிரத்தைப் பொறுத்து பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பாரம்பரியமாக வரும் புற்றுநோயைத் தவிர்க்க முடியாது என்றாலும், சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவை மூலம் இந்நோயைத் தவிர்க்கலாம். மிதமான உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம் என்றார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval