சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த வாரம் இரு கப்பல்கள் மோதிகொண்டது. இதில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து அனைத்தும் கடலில் கலந்தது.
இந்நிலையில், எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை எண்ணெய் படலம் பரவியது. இதனை அகற்றும் பணியில் கடற்படை ஊழியர்கள், மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் கச்சா எண்ணெயை அவர்களால் முழுமையாக அகற்ற முடியவில்லை. மாணவர்கள் களத்தில் இறங்கிய பின்னரே 90 சதவீதம் அளவுக்கு தற்போது கச்சா எண்ணெயை அகற்றியுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியதாவது: கப்பல் விபத்து பற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கையின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து கச்சா எண்ணெயை அகற்றுவதற்கு உதவிதற்கு மிகவும் பாராட்டுக்கள் என்றார். தமிழக மாணவர்கள் இந்தியாவிற்கே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval