சென்னையில் இருந்து சிங்கப்பூர் பறக்கத் தயாராகிறது விமானம். பயணிகள் இருக்கைகளில் அமர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்புக்கு மத்தியில், பயணிகளைக் கடந்து ஒருவர்,முன்னேறுகிறார். இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் பாதங்களைத் தொட்டு வணங்கி, மீண்டும் தனது இடத்துக்குத் திரும்புகிறார்.
அவர் அந்த விமானத்தை இயக்கப்போகும் விமானி. அவர் பெயர் பிரதீப் கிருஷ்ணன்!