அந்தமான் அருகே மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 7ம் தேதி முதல் படிப்படியாக வலுவடைந்து கடலூர் மாவட்டத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.