பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கும் ரபேல் போர் விமானங்கள் சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்படும் என்று சீன ஊடகம் தெரிவித்துள்ளது.பிரான்ஸிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கையெழுத்தானது. அடுத்த 36 மாதங்களில் ரபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பணிகளை பிரான்ஸ் தொடங்க உள்ளது.