தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் போகும் சாலையில் அமைந்துள்ள மவுண்ட் கார்மல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்த பெரியக்கோட்டை மெயின்ரோடு ரவி அவர்களின் மகன் சந்தோஷ் என்ற மாணவனை பள்ளியின் ஆசிரியர் கடும்சொற்களை கொண்டு திட்டி பள்ளியை விட்டு வெளியேற்றியதால் மனமுடைந்த மாணவன் சந்தோஷ் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்
கல்வி என்கிற பெயரில் வியாபாரவெறியில் தரம் இல்லாத ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தும் இதுபோன்ற பள்ளிகள் சந்தோஷ் போன்ற பல மாணவர்களின் உயிரை தினம் தினம் குடித்துகொண்டு தான் இருக்கிறது
