Showing posts with label முக்கிய அறிவிப்பு*. Show all posts
Showing posts with label முக்கிய அறிவிப்பு*. Show all posts

Thursday, November 30, 2017

*அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல்துறையின் முக்கிய அறிவிப்பு*

Image may contain: 1 person, beard and closeup
புகைப்படத்தில் கண்டுள்ள நபர் இன்று (30.11.2017) காலை 08.00 மணியளவில் தென்காசி – அம்பாசமுத்திரம் செல்லும் பஸ்ஸில் வந்துள்ளார். அப்போது ஆழ்வார்குறிச்சி-பொட்டல்புதூர் மெயின்ரோட்டில் இசக்கியம்மன் கோயில் அருகே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டிருந்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக பஸ்ஸில் வந்த மேற்படி புகைப்படத்தில் கண்ட நபரும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை செய்துள்ளார். இந்த பணியில் ஈடுபட்டபோது, இவருக்கு மரக்கிளை கண்ணில் குத்தி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.