Showing posts with label ரமலான் 2015. Show all posts
Showing posts with label ரமலான் 2015. Show all posts

Friday, July 17, 2015

அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.! [ புகைப்படங்கள் }

இன்று 18/07/2015 சனிக்கிழமை இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் நோன்புப் பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டன.. அதிரையிலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப் பட்டன. இன்று காலை பல்வேறு பகுதிகளில் நடந்த பெருநாள் தொழுகையில்  அதிரையர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு  தொழுது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Thursday, July 16, 2015

துபாய் ஈத்காவில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் சந்திப்பு ! [ புகைப்படங்கள் ]

அமீரகம் துபையில் இன்று 17/07/2015 வெள்ளிக் கிழமை நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. டேரா துபை ஈத்காவில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

அனைவருக்கும் அதிரை அண்ணாவியார் குழுமத்தினரின் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் .!

இப்புனித மிகு நோன்புப் பெருநாளை இனிதாய் கொண்டாடவிருக்கும் இவ்வுலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் இணையதள வாசகர்களுக்கும் அதிரை அண்ணாவியார் குழுமத்தினரின் இனிய  நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
www.adiraiannaviyar.blogspot.com 
ஆசிரியர் அப்துல் வாஹிது & அதிரை.மெய்சா

Thursday, June 25, 2015

ரமலானின் வருகையும் நோன்புக்கஞ்சியின் வாசனையும்.!



ஆக்கம்: அதிரை மெய்சா

குரான் ஓதுதல்,தொழுகை, பாவமன்னிப்பு,இறையோனிடம் இருகையேந்தி துவா கேட்பது விபாதத்து செய்தல்,என இறைவணக்கத்தின் வாசனையோடு ஒவ்வொரு ரமலான் மாதத்துடன் நோன்புக் கஞ்சியின் வாசமும் சேர்ந்து நாம் நோற்க்கும் நோன்பை மனதார மகிழ்ச்சியடையச் செய்து மணக்க வைத்து கழிக்கச்செய்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நோன்புக் கஞ்சி நோன்புவைப்பவர்களுக்கு முக்கிய உணவாக நம்மோடு இரண்டரக்கலந்து விட்டது என்றுசொன்னால் அது மிகையல்ல.