லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்று சொல்லி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை 23 வருடத்தில் 23-வது தடவையாக டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டார்கள். இது வழக்கமான டிரான்ஸ்ஃபர் என்று சொன்னாலும் அதற்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் இருக்கிறது. சகாயம் நிர்வாக இயக்குநராக இருந்த கோ-ஆப்டெக்ஸிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காத காரணத்துக்காகவே அவர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்''
''மதுரையில் முறைகேடாக நடந்து வந்த கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார் அங்கே ஆட்சியராக இருந்த சகாயம். அதன் பிறகு இந்த கிரானைட் முறைகேடு பற்றி அ.தி.மு.க ஆட்சியே பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினாலும் அன்று சகாயம் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படவும் அந்த கிரானைட் விவகாரம்தான் காரணம் என்று சொல்லப்பட்டது.