ஆண்டின் அனைத்து நாட்களும் தண்ணீர் ஓடும் நதியாகவும் ,தமிழகத்தில் உருவாகும் நதியாகவும் இருப்பது நெல்லை சீமையில் உருவாகி ஓடும் தாமிரபரணி நதியாகும் .திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 86 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசன வசதியை தருவதோடு விருதுநகர் மாவட்டத்தையும் சேர்த்து மூன்று மாவட்ட மக்களுக்கும் குடிநீருக்கும் பயன்படும் ஜீவ நதியாக தாமிரபரணி நதி உள்ளது .