ஆண்டின் அனைத்து நாட்களும் தண்ணீர் ஓடும் நதியாகவும் ,தமிழகத்தில் உருவாகும் நதியாகவும் இருப்பது நெல்லை சீமையில் உருவாகி ஓடும் தாமிரபரணி நதியாகும் .திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 86 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசன வசதியை தருவதோடு விருதுநகர் மாவட்டத்தையும் சேர்த்து மூன்று மாவட்ட மக்களுக்கும் குடிநீருக்கும் பயன்படும் ஜீவ நதியாக தாமிரபரணி நதி உள்ளது .
இன்றைக்கு அதற்கு ஒரு கேடு உருவாகிவுள்ளது .மூன்று மாவட்ட மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலை துவங்கியுள்ளது .தமிழக அரசின் ஒத்துழைப்போடு தனியார் குளிர்பான நிறுவங்கள் கங்கை கொண்டானில் துவங்கப்பட்டு ,ஒரு நாளைக்கு 30 லட்சம் தண்ணீரை உறிஞ்சும் வேலையை செய்து வருகின்றன .
இதனை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால் ,மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் .எனவே , உடனடியாக அனைத்து வேறுபாடுகளையும் மறந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து இந்த அபாயத்தை தடுத்து நிறுத்த முன் வரவேண்டும் .
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval