Wednesday, November 25, 2015

சட்ட மாமேதை அம்பேத்கர்

851_n
இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியாக சிறப்பிக்கப்படும் டாக்டர்.B.R. அம்பேத்கர் முதன் முதலில் போட்டியிட எம்.பி. தொகுதி கொடுத்த கட்சி ” இந்திய யூனியன் முஸ்லிம் லீக்” ..!
முஸ்லிம் லீக் வேட்பாளராகவே போட்டியிட்டு முஸ்லிம் லீக் எம்.பி.யாக நாடாளுமன்றம் சென்று முதல் சட்ட அமைச்சர் பதவி பெற்றார் என்பது பொக்கிஷமான வரலாறு.
இன்று அம்பேத்கரை போற்றும் புகழும் பல இயக்கங்கள் அன்று அவரை கண்டுகொள்ளவே இல்லை.. அதை அம்பேத்கர் அவர்களும் எதிர்பார்க்க வில்லை..
ஆனால் முஸ்லிம் லீக்கில் அம்பேத்கர் வேட்பாளராக நிற்க்கிறார் என்றால் எந்த அளவிற்கு அம்பேத்கருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பாசம் நிறைந்திருக்கும் என்பதை உணர முடிகிறது..
அம்பேத்கர் நினைத்திருந்தால் சுயேச்சையாக கூட நின்றிருக்கலாம்
காரணம் நாளைய வரலாறு அம்பேத்கர் முஸ்லிம் லீக்கில் நின்று முஸ்லிம்களால் ஜெயித்தார் என்று ஆகிவிடுமே என்பதற்காக!
ஆனால் அம்பேத்கர் அப்படி ஆனால் மகிழ்ச்சி தான் என எண்ணி அவருக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் உள்ள அன்பை உலகிற்கு காட்டும் விதம் முஸ்லிம் லீக் வேட்பாளராக நின்று ஜெயித்துள்ளார்…
முஸ்லிம் லீக் முஸ்லிம்கான கட்சி மதவெறி கட்சி அதில் முஸ்லிம் மட்டும் தான் இருப்பார்கள் என்ற அறைவேக்காடுகளின் வாதத்திற்கு மரணஅடி கொடுக்கும் விதத்தில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக ஆன அம்பேத்கர் முஸ்லிம்களின் சகோதர சமத்துவ அன்பை காட்டியுள்ளார்…
இந்தியாவில் இந்துகளும் முஸ்லிம்களும் கிருஸ்தவர்களும் மற்ற மதத்தினரும் மாமன் மச்சான்களாக அண்ணன் தம்பிகளாக அன்பை அள்ளி பருகிய அக்காலம் மறுபடியும் மலர வேண்டும்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval