துபாய்: வெளிநாடுகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து விடுமுறையில் நாடு திரும்பும் தொழிலாளர்கள் கொண்டு வரும் டிவி,உள்ளிட்ட பொருட்களுக்கான சுங்க வரியை நீக்க வேண்டும்.அதே போன்று வெளிநாட்டில் உயிரழக்கும் இந்திய தொழிலாளர்கள் உடலை கட்டணமின்றி தாயகம் எடுத்துவர மத்திய அரசு ஏற்பாடும் செய்ய வேண்டும் என எஸ் டி பி ஐ தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார் வெளிநாட்டு சுற்றுபயணமாக அமீரகம் வருகை தந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: வெளிநாட்டு வாழ் இந்திய மக்கள் அதிகப்படியான அன்னிய செலவாணியை இந்தியாவுக்கு ஈட்டி தருகிறார்கள். இவர்களுக்கு வேண்டிய நலபணிகளை இந்திய அரசு செய்து தரவேண்டும்.பிற நாடுகள் வெளிநாடுகளில் வாழும் தம் மக்களுக்கு அதிகப்படியான நலப்பணிகள் செய்து தருகிறார்கள்.
வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் உயிரழப்பு, திடீர் வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகும் போது அவர்கள் இந்திய அராங்கம் தேவையான உதவிகளை செய்ய முன் வர வேண்டும் ஆனால் இந்திய அரசாங்ம் வெளிநாட்டு வாழ் இந்திய மக்களுக்கு தேவையான நலப்பணிகளை செய்வதில்லை.
அதேபோன்று வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு நலப்பணி மேற்கொள்ள வெளிநாட்டு வாழ் நல வாரியம் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.வெளிநாட்டில் உயிரழக்கும் ஏழை தொழிலாளர்களின் உடலை தாயகத்திற்கு கட்டணமின்றி விமானத்தில் எடுத்து வர இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதே போன்று இவை அனைத்தையும் எங்கள் கூட்டணியில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வோம்
அதே போன்று 2 ஆண்டுகள் கழித்து வெளிநாடுகளில் பணிபுரிந்து விடுமுறை ஊர் திரும்பும் தொழிலாளர்கள் கொண்டு வரும் டிவி உள்ளிட்ட சில பொருள்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுகிறது.இவற்றை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டதொகுதிகளில் தேர்தல் பணிகுழுவை அமைத்து களப்பணியை துவங்கி விட்டோம்.கடந்த தேர்தலில் நாங்கள் போட்டியிட்டோம் நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுகவை ஆதரித்தோம் . தமிழகத்தை பொருத்த வரை திராவிட கட்சிகள்தான் ஆட்சியிலும் எதிர்கட்சியாகவும் உள்ளது திரவிட தொடக்க கால கொள்கை மற்றும் மதவெறியை எதிர்த்து ,ஆதிக்க சக்திகளை எதிர்த்து உருவானது திராவிட கட்சிகள் என்பதை அனைவரும் அறிவோம் . எனவே பாஜக காலூன்றாத வகையில் மதசார்பற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணியில் எஸ்டிபிஐ இணையும் .
தமிழகத்தில் 3வது அணி தேவையில்லை. இதனால் ஓட்டுக்கள் சிதறும் எனவே மூன்றாவது அணியில் இருக்க கூடிய ஏனைய கட்சிகளும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றினைய வேண்டும் ஓரணியில் திரள வேண்டும். எஸ்டிபியை கட்சியில் முஸ்லிம்கள் மட்டும் இல்லை அனைத்து சமூகத்தவரும் இணைந்து வருகிறார்கள். கட்சி வலிமை பெற்று வருகிறது. எனவே வரக்கூடிய தேர்தலில் எங்கள் வலிமையை அறிந்து 5க்கும் மேற்பட்ட தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் கேட்போம். தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை ,குமரி,ராமநாதபுரம்,மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் எஸ்டிபிஐ வலிமையாக உள்ளது.இதனை தவிர மற்ற மாவட்டங்களிலும் வளர்ச்சி பெற்று வருகிறது.அதே போன்று தமிழகத்தில் சட்டசபை தேர்தலை தொடர்ந்து வரக்கூடிய தேர்தலிலிலும் கணிசமான இடங்களை கைப்பற்றுவோம்
கடந்த தேர்தலில் பாஜாக வளர்ச்சி என்ற கோஷத்தை மக்களிடம் வைத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விட்டு வளர்ச்சிக்கான எவ்வித நடவடிக்கையை எடுக்காமல் இருப்பது மக்களுக்கு கொடுத்திருக்க கூடிய நேர் விரோதமான செயல்.பாஜக மற்றும் சங்க்பரிவார் அமைப்புகளால் ஏற்படுத்தப்படும் மாட்டுகறி பிரச்சனை ,முகத்தில் கரிபூசுவோம் என்பது போன்ற பல்வேறு செயல்களினால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அறிஞர்கள்,எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பி அளிக்கிறார்கள் இது போன்ற செயல்கள் இந்தியாவின் இமேஜை குறைத்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் மூடிஸ் என்ற நிறுவனமும் இது போன்ற சம்பவங்களால் பிரதமர் மோடி அரசின்மீது நம்பகதன்மை வெளிநாட்டில் குறைந்து விடும் என வலியுறுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசின் மோசமான நடவடிக்ககளுக்கு பலன் தான் பீகாரில் கிடைத்த தோல்வி இனியாவது பாஜக அரசு தங்களை திருத்தி கொண்டு நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது விருப்பம் மத்திய அரசு இனியும் மோசமான நடவடிக்கைகளை தொடர்ந்தால் பீகாரை விட மோசமான தோல்விகளை மக்கள் கொடுப்பார்கள்
அமீரகம் பெரும்பாண்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகளாக இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அவரவருக்கான மத சுந்ததிரம் தரப்பட்டுள்ளோடு அனைவரும் நல்லிணக்கதோடு ஒருவருகொருவர் அன்போடு வாழும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளாது.இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள அமீரக ஆட்சியாளார்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.இதனை இந்தியாவின் தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் முன்மாதிரியாக எடுத்து நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் மதசுந்ததிரத்தை பாதுகாப்பதோடு நாட்டில் நல்லிணக்கம் நிலைத்து தளைத்து நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
courtesy,Dinakaran
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval