Friday, November 20, 2015

பாலைவனத்தில், ஒரு பகுதியை காட்டி

  
பாலைவனத்தில், ஒரு பகுதியை காட்டி, "நாளை முதல் இந்த இடம் உனக்கு சொந்தம்" என்று அமீரகவாசியிடம் கூறியது, அல் அய்ன் நகர முனிசிபாலிடி.
அந்த அரபியோ "இந்த இடத்தில் நான் என்ன செய்ய?" என்று கேட்டார். "இந்த இடத்தில் நீங்கள் தக்காளி பயிரிட போகிறீர்கள்"! என்றது அரசு. அந்த அரபிக்கு ஆச்சரியம்.
"எவ்வாறு இது சாத்தியம்?" என்று கேட்டார். "அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்" என்றது அரசு.
அந்த அரபிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாலைவன மண்ணை சுமார் 5 அடிக்கு அள்ளி வெளியேற்றினார்கள், பிறகு பயிரிட தோதுவான மண்ணை அந்த இடத்தில் கொட்டினார்கள். தண்ணீர் வசதி அங்கே கொண்டுவந்தார்கள், தக்காளி பயிரிட்டார்கள், நல்ல விளைச்சல், தக்காளி நன்றாக காய்க்க தொடங்கியது, அந்த இடத்தின் சொந்தகாரராக அறிவிக்கப்பட்ட அந்த அரபி சும்மா வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தார், அறுவடை நடந்தது, அரசே அந்த தக்காளிக்கு உரிய விலை கொடுத்து அந்த அரபியிடம் வாங்கியது, வாங்கிய தக்காளியை சில பரிசோனைகளுக்கு பின்பு கொண்டு போய் குப்பையில் கொட்டினார்கள். அனத்து சிலவையும் அரசே செய்துவிட்டு, தக்காளியையும் விலை கொடுத்து வாங்கினார்கள்.
இது போன்று மூன்று முறை செய்தார்கள், நான்காவது முறை அந்த தக்காளியை குப்பையில் கொட்டாமல், தக்காளி பேஸ்ட் தயாரித்து விற்பனைக்கு அனுப்பினார்கள், சும்மா வெறுமனே நின்றும் அந்த அரபிக்கு அதன் லாபத்தை கொடுத்தார்கள். பின்பு தக்காளி பழமாக மார்கெட்டில் விற்பனைக்கு அனுப்பினார்கள். அதன் லாபத்தையும் அந்த அரபிக்கே கொடுத்தார்கள்.
ஐந்தாவது விளைச்சல் ஆரம்பிக்க போகும் போது, அந்த அரபியை அழைத்து, "இனி நீ தான் விளைவிக்க வேண்டும்" என்று கூறினார்கள் - இதுதான் விவசாயம் என்பது, இதைதான் பாலைவன மக்கள் கற்றுக்கொண்டார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் அய்ன் என்ற இடம், இது அபுதாபியின் கீழ் இயங்கும் நகரம். தற்போது, அன்றாட தேவைக்கான அத்தனை காய்கறிகளும் விளைவிக்க படுகின்றன. இன்னும் சில வருடங்களில் அவர்கள் தன்னிறைவை அடைவார்கள், கோழி பண்ணை, பால் பண்ணை போன்றவைகளும் இங்கே பிரபலம். பெட்ரோல் ஏற்றுமதியை போலவே, உணவு பொருட்களையும் அரபு நாடுகள் ஏற்றுமதி செய்தாலும் ஆச்சரியம் இல்லை.
அரபுநாட்டு தக்காளி, வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்யும் காலம் வரலாம்!
விளைநிலங்கள் - வீட்டு மனைகளாக ஏமாற்றப்படுகின்றன. தண்ணீருக்கு கையேந்தி காத்து இருப்பது போல, அரிசிக்கும் பருப்புக்கும், காய் கறிக்கும் கையேந்தி நிற்கும் அவலம் தமிழகத்தில்.
இணையத்திலிருந்து..

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval