Wednesday, November 4, 2015

வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் உடனடியாக வினியோகிக்க உத்தரவு

gas-cylinder
தீபாவளியை முன்னிட்டு, வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டரை உடடியாக வினியோகிக்க, எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.
தமிழகத்தில், பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.59 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, 1,024 காஸ் ஏஜன்சிகள் மூலம், சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. காஸ் சிலிண்டர் கேட்டு, வாடிக்கையாளர் முன்பதிவு செய்த மூன்று தினங்களுக்குள் வினியோகம் செய்ய வேண்டும்; ஆனால், ஏஜன்சி ஊழியர்கள், குறித்த நேரத்தில் வினியோகம் செய்வதில்லை. சிலிண்டர் கொண்டு வரும் போது, வீட்டில் ஆட்கள் இருந்தாலும், வீடு பூட்டி இருந்ததாகக் கூறி, ரத்து செய்வதுடன், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், தினமும், 25 லட்சம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. தீபாவளிக்கு, வீடுகளில் பலகாரம் செய்யும் வழக்கம் உள்ளதால், காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகம் இருக்கும். எனவே, முன்பதிவு செய்துள்ள அனைவருக்கும், உடனடியாக காஸ் சிலிண்டர் வினியோகிக்க ஏஜன்சிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வீட்டில் ஆட்கள் இல்லை என்றாலும், அவர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு சப்ளை செய்ய முயற்சிக்க வேண்டும். சிலிண்டர் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval