Sunday, November 8, 2015

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜா மண்டலம் மாநில பொது செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் செயல்படக்கூடிய மமக - வுக்கு முழு ஆதரவு.

ஐக்கிய அமீரக ஷார்ஜா மண்டல  தமுமுக மமக பொதுக்குழு 05/11/15 அன்றிரவு அமீரக துணைச் செயலாளரும்,ஷார்ஜா  மண்டல பொறுப்பாளருமான சகாதரர் மதுக்கூர் அப்துல் காதர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் # 1

தமுமுக தான் நமது தாய்க்கழகம் என்றும்,மமக அதன் அரசியல் பிரிவு என்பதையும்,தமுமுக தலைமையில் சமுதாய மற்றும் மார்க்க பணிகளை வீரியத்துடன் எடுத்து செல்வது.


தீர்மானம் # 2

ஒற்றுமைக்காக அமீரக நிர்வாகம் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது.

தீர்மானம் # 3

தாம்பரம் பொதுக்குழுவில் தகுந்த காரணங்களும் ஆதாரங்களும் இல்லாமல் மமக நிர்வாகத்தைக் கலைத்து விட்டு,புதிய நிர்வாகத்தை 
ஷார்ஜா மண்டலம் ஏற்க மறுக்கிறது.

தீர்மானம் # 4

தகுந்த காரணங்களும் ஆதாரங்களும் 
நிரூபிக்கப்படும் வரை,மாநில பொது செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் செயல்படக்கூடிய மமக - வுக்கு முழு ஆதரவு என ஒரு மனதாக
ஷார்ஜா மண்டலம் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ஷார்ஜா மண்டலத்தின் அனைத்து கிளைகளிலும் இந்த நிலைத் தொடர்வது என தீர்மானிக்கப்பட்டது.
தகவல் ;N.K.M. அஸ்ரப் அலி 
துபாய் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval