பார்க்க குழந்தை போல் இருக்கும் இந்த ஒன்பது வயது சிறுவன் இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா. இவர் குழந்தைகள் பள்ளி செல்லும் போது இவர் செய்யும் காரியங்கள் உங்களை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும்.
இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து வரும் சிறு வயது தலைமை நிர்வாக அதிகாரி தான் ரூபன் பால். கணினி ப்ரோகிராமிங் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு கேமிங் நிறுவனமான ப்ரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தான் ரூபன். இதோடு இல்லாமல் சைபர் செக்யூரிட்டி, ஹேக்கிங், ஆப் டெவலப்பர் என பல்வேறு பணிகளில் ஆர்வம் செலுத்தி வருகின்றார்.
கடந்த ஆண்டு சிறப்புரை வழங்கி இந்த ஆண்டு கிரவுண்டு சீரோ சம்மிட் 2105 குழுவின் சிறப்பு தூதராக ரூபன் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகளவில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மாநாடாக கிரவுண்டு சீரோ சம்மிட் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகின் தலைசிறந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval