Monday, November 16, 2015

கணணியில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டறிய விண்டோஸ் புதிய வசதி

windows-password
நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் கணனியில் விண்டோஸ் நிறுவப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை உங்கள் கணனியில் எவ்வாறான பிரச்சினைகள் தோன்றியிருக்கும் என்பதனை அறிந்து கொள்ள விண்டோஸ் இயங்குதளத்திலேயே ஒரு வசதி தரப்பட்டுள்ளது.
கணனியை நீங்கள் பயன்படுத்தும் போது ஒவ்வொருநாளும் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை பின்வருமாறு பிரதானமாக நான்கு வகைப்படுத்தி தருகின்றது.
● Application Failures – நீங்கள் விண்டோஸ் கணனியை பயன்படுத்துகையில் மென்பொருள்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகள்.
● Windows Failures – விண்டோஸ் இயங்குதளத்தின் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகள்.
● Miscellaneous Failures – விண்டோஸ் ஏற்படும் சாதாரண பிரச்சனைகள். (உதாரணமாக கணனி முறையாக Shutdown செய்யப்படாமல் இருத்தல்.)
● Warnings – எச்சரிக்கைகள்.
★ Information – இது உங்கள் கணனியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிக்கின்றது. (உதாரணமாக ஒரு மென்பொருள் வெற்றிகரமாக நிறுவப்பட்டிருந்தால் அது பற்றிய தகவலை தருகின்றது எனவே இது ஒரு பிரச்சினையை குறிப்பதாக கருத முடியாது.)
மேற்குறிப்பிட்ட அம்சங்களை மிகவும் இலகுவாகவும், தெளிவாகவும் அறிந்து கொள்ளும் வகையில் விண்டோஸ் இல் தரப்பட்டுள்ள Reliability Monitor எனும் tool துணை புரிகின்றது. இது தரும் தகவல்கள் வெறும் எண்கள் எழுத்துக்களில் மாத்திரமின்றி இன்றி வரைபு வடிவிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை செயற்படுத்தி உங்கள் கணனியிலும் எவ்வாறான பிரச்சனைகள் எழுந்துள்ளது என்பதனை அவதானிக்க Run Program (Win+R) இனை திறந்த perfmon /rel என்பதனை தட்டச்சு செய்து Enter அழுத்துக அவ்வளவு தான் !!!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval