Tuesday, November 24, 2015

50 குடும்பங்களுக்கு உணவளித்து அரவணைத்த பேருந்து ஓட்டுனர்

செம்மஞ்சேரி:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 50 குடும்பங்களுக்கு தன் சொந்த செலவில், நான்கு நாட்கள் உணவளித்த மாநகர பேருந்து ஓட்டுனரை, பகுதிவாசிகள் வெகுவாக பாராட்டினர்.
செம்மஞ்சேரி ஒன்பதாவது நிழற்சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம், 35; மாநகர பேருந்து ஓட்டுனர். வெள்ளத்தால் சூழப்பட்ட சுனாமி குடியிருப்பில், ௫௦க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கின.
கடந்த நான்கு நாட்களுக்கு தன் வீட்டில் உணவு சமைத்து, 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த
மக்களின் பசி போக்கியிருக்கிறார், ஓட்டுனர் ஆறுமுகம்.

அவர் கூறியதாவது:சக மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற குணம் என்னிடம் இயல்பாகவே உள்ளது. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வெள்ளம் புகுந்து, பேருந்து உள்ளே நுழைய முடியவில்லை. வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கும் வழியில்லாமல் பலரும் தவித்து வந்தனர்.

உணவுப் பொருட்களை தயார் செய்வதற்கு வழியில்லாமலும், வெளியில் உணவுப்பொருட்களை வாங்க முடியாமலும் பகுதிவாசிகள் அவதிப்பட்டனர்.என் குடும்பம் மேல்மாடியில் இருந்ததால், வெள்ளத்தால் பெரிய பாதிப்பை சந்திக்கவில்லை. வெள்ள பாதிப்பின் உச்சமாக இருந்த நான்கு நாட்கள் தொடர்ந்து, நானே உணவு சமைத்து, அனைவரின் வீடுகளுக்கும் சென்று வழங்கினேன். இயல்பு வாழ்க்கை நிலை குலைந்த தருணத்தில், என் குடும்பம் பசியாறுவது போல அக்கம்பக்கத்து குடும்பத்தினரும் பசியாறி கொண்டிருக்கின்றனர் என்ற நிம்மதி எனக்கு கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
courtesy;Dinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval