Tuesday, July 17, 2018

நீர் இன்றி அமையாது உலகு....


கர்நாடகா விடம் இருந்து தண்ணீர் வாங்கி கடலில் தான் சேரப்போகிறது என்று நொந்து கொண்டு இருப்பவர்களுக்கு.......நாங்கள் தஞ்சாவூர் பேராவூரணி அடுத்த களத்தூர் கிராம களத்தூர் கிராமம் பேராவூரணி இளைஞர்கள்....2 போகம் விளைவிக்க கூடிய தண்ணீரை சேமிக்க போகிரோம் என்ற மகிழ்ச்சியில் சொல்கிறோம்......எங்கள் ஊர் இளைஞர்கள்  களத்தி குளம் என்ற 63 acre கொண்ட குலத்தை ஆக்கிரமிப்பு அகற்றி  கரை கட்டி தூர் வாரி சீர் செய்து உள்ளார்கள் " களப்பணி செய்ய முடியாதவர்கள்  நிதி உதவி கொடுத்தும் நிதி உதவி கொடுக்க முடியாதவர்கள் களப்பணி செய்தும் இந்த பெரிய வேலையை சுலபமாக்கி உள்ளார்கள்..... குலத்தோடு சேர்ந்து நாங்களும் மேட்டூர் தண்ணீரை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் எங்களால் முடிந்த அளவு தண்ணீரை சேமிப்போம் என்ற நம்பிக்கையில்.... இத்தோடு எங்கள் ஊரில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் இனி வரும் காலங்களில் சீர் படுத்த உள்ளோம்.....கடலில் தண்ணீர் சேரா வண்ணம் முடிந்த அளவிற்கு தண்ணீரை சேமிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்பொழுது எங்களுக்கு உள்ளது... உங்கள் ஊரிலும் குளங்கள் இருக்கும் ஏரிகள் இருக்கும் முயற்சி தான் உங்களுக்கும் இந்த நம்பிக்கையை தரும்... அரசின்  தயவை எதிர் பார்த்தால் இந்த கனவு இந்த ஜென்மத்தில் ஈடேராது.....நீங்களே முயற்சி செய்யுங்கள்..அடுத்த மாநிலங்களில் தண்ணீர் பிச்சை எடுத்து எங்கு கொண்டு சேர்த்து வைக்க போகிறோம்...... யோசித்து செயல் பட்டால் இனி வரும் காலங்களில் நாம் பிழைத்து கொள்ளலாம....... நீர் இன்றி அமையாது உலகு....

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval