தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற அரசு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் ஜெஸிபி ஓட்டுனர் ஒருவரால் அதில் இருந்த 80 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக எல்லையில் இருந்து கேரளா சென்ற அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.
அதில் இருந்த 80 பயணிகளுடன் அந்த பேருந்தானது அதிருஷ்டவசமாக சாலையின் ஒருபக்கம் இருந்த பெரும் பள்ளத்தில் கவிழும் நிலையில் நின்றது.
முன்பக்க சக்கரம் அந்தரத்தில் தொங்கியபடி பேருந்து எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலையில் இருந்துள்ளது.
அப்போது அந்த பள்ளத்தின் ஒருபக்கம் ஜெஸிபி இயந்திரம் மூலம் மண் அள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்தார் கபில் என்ற இளைஞர்.
பேருந்து விபத்துக்குள் சிக்குவதை நேரில் பார்த்து உறைந்துபோன அவர் உடனடியாக தமது ஜெஸிபியை அந்த பேருந்து இருக்கும் பகுதிக்கு செலுத்தியுள்ளார்.
மிகுந்த எச்சரிக்கையுடன் பேருந்தின் அருகே சென்று நொடிக்கு நொகி பள்ளத்தில் கவிழ்ந்துகொண்டிருக்கும் பேருந்தை ஜெஸிபி இயந்திரம் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் பேருந்துக்குள்ளிருந்து உயிர் பயத்தில் கதறும் பயணிகளை பதறாமல் ஒவ்வொருவராக இறங்க சைகை காட்டியுள்ளார்.
பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகளில் பெரும்பாலானோர் கண்ணீருடன் இளைஞர் கபிலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
கபில் தமது ஜெஸிபி இயந்திரத்துடன் அந்த பகுதியில் இல்லை என்றால், இன்றைய நாளேடுகளில் பேருந்து விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் முகங்கள் வெளியாகியிருக்கும்.
உண்மையில் ஜெஸிபி இயந்திரத்தில் உள்ள இரும்பு சங்கிலியானது அறுந்து போயுள்ளதால் அதை இணைக்கும் பணியிலேயே கபிலும் அவருடன் பணியாற்றுபவர்களும் ஈடுபட்டிருந்தனர்.
மட்டுமின்றி நேரம் அப்போது மாலை 4 மணி என்பதால் அலுவலகம் திரும்புவதாகவும் அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே பேருந்து விபத்தை கபில் காண நேர்ந்ததும், சமயோசிதமாக ஜெஸிபியால் பெரும் உயிரிழப்பை தவிர்த்ததும் இச்சம்பவம் வெளியானதும் பலரும் கபிலை மொபைலில் அழைத்து பாராட்டி வருகின்றனர்.
நூற்றாண்டு நோய் நொடி இன்றி நலமுடன் வளமுடன் வாழ்வாங்கு வாழ்க சகோதரா...#கபில்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval