இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமியைச் சந்திக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற ஆனந்தி. ` நீங்கள் உதவவில்லையென்றால் நாங்கள் மூவரும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை'' என கண்ணீருடன் கதறினார். ஆனந்தி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரின் குடும்பத்தின் நிலையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து ஆனந்திக்காகச் சிறப்பு அரசாணை தயார் செய்யப்பட்டு, அவருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன உத்தரவை எடுத்துக்கொண்டு ஆனந்தியின் வீட்டுக்கே ஆட்சியர் கந்தசாமி சென்று வழங்கினார். தன் வீட்டுக்கே மாவட்ட ஆட்சியர் தேடி வந்து பணி நியமன ஆணை வழங்கியதைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் சிந்தினார் ஆனந்தி.`எங்களைப் பார்த்து யாரும் சாப்பிட்டீங்களானு கூட கேட்கமாட்டாங்க?’ என்று கதறிய ஆனந்தியின் வீட்டிலேயே மாவட்ட ஆட்சியர் உணவருந்தி அவர்களை மகிழ்வித்தார். ஆனந்தியின் சகோதரிக்கும் கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த வீட்டை இடித்து விட்டு அரசு சார்பில் பசுமை வீடு கட்டிக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்கான பணிகளும் உடனடியாகத் தொடங்கியது. ஆனந்தியும் தொலை தூரக் கல்வியில் பட்டப்படிப்பு படிக்கவும் மாவட்ட நிர்வாகமே உதவியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், ``ஆனந்தியின் தாயார் சத்துணவு உதவியாளராகத்தான் இருந்தார். அதே பணியை ஆனந்திக்கு வழங்கினால் சொற்ப சம்பளம்தான் கிடைக்கும். அதனால், சத்துணவு அமைப்பாளர் பதவி வழங்க அரசுக்குப் பரிந்துரைத்து பணி வழங்கப்பட்டுள்ளது '' என்றார்.
நேற்று முதல் கணிக்கிழுப்பை ஊராட்சிப் பள்ளியில் ஆனந்தி ஆனந்தமாக தன் பணியைத் தொடங்கினார். இனியாவது ஆனந்தி வாழ்க்கையில் ஆனந்தம் விளையாடட்டும்!
courtesy vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval