பள்ளியில் இருந்து காணாமல் போன மூன்று வயது சிறுவன் அஜயை சில மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரின் ஒப்படைத்த - புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான டீமை பொதுமக்கள் வெகுவாக பாரட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அரசு பள்ளியில் படித்து வந்து வரும் மூன்று வயது சிறுவன் அஜய் நேற்று மதியம் 3மணி அளவில் பள்ளியில் இருந்து உறவினர் என்ற போர்வையில் பள்ளியில் இருந்து இரண்டு பேர் கொண்ட பெண் கும்பல் சிறுவனை அழைத்து சென்று உள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை காணவில்லை என கூறி புளியந்தோப்பு காவல்நிலையத்தில் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு சிறிது நேரத்தில் புகார் மீது மின்னல் வேகத்தில் குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் அதிரடியாக் இறங்கிய ஆய்வாளர் டீம் பள்ளி அருகே உள்ள சிசிடிவி காட்சியை ஆராய்ந்து பார்த்த போது இரண்டு பெண்கள் குழந்தையை கடத்தி செல்வது பதிவாகி இருந்துள்ளது. இதனை வைத்து விசாரணையை விரிவுபடுத்திய காவல்துறையினர்.வியாசர்பாடியை சேர்ந்த குட்டியம்மள் வீட்டுக்கு சென்று விசாரணை செய்ததில் குழந்தையை கடத்தியது நான் தான் என ஒப்புகொண்டார் .அதனை அடுத்து குழந்தையை வைத்து இருந்த ஓட்டேரி சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தையை வைத்து கொண்டு தலைமை செயலாக காலனியில் வலம்வந்து கொண்டு இருந்தார்.உடனே இரவு 11மணி அளவில் குழந்தையை மீட்டு கடத்திய இரண்டு பெண்களையும் புளியந்தோப்பு காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது சிறுவனின் பெற்றோர் காவல்துறை ஆய்வாளரிடம் கண்ணீர் மல்க காலில் விழுந்து நன்றி தெரிவித்து காவல்துறை டீமை வெகுவாக பாராட்டினார்கள்...
*துடிப்பு மிக்க காவல்துறை சேவையில் - துடிப்பு சற்றும் குறையாமல் சிறுவனை மீட்ட இந்த டீம்மால் உள்ளபடியே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... இந்த செயல் சமூக தலத்தில் வேகமாக பரவி பாராட்டை பெற்று வருகிறது...*
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval