ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட 80 ஆயிரம் ரூபாய் ஐபோனை நேர்மையான முறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் கமால் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையர், நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திரு.வி.க நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கமால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு, ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே, 2 பெண்களை சவாரி ஏற்றிச் சென்று, எழும்பூர் எத்திராஜ் சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், பல சவாரிகள் முடிந்து வீட்டிற்கு சென்றபோது, பின் சீட்டில் ஐபோன் இருந்தது தெரியவந்தது.
சார்ஜ் இல்லாதிருந்த அந்த போனை சார்ஜ் செய்து, அதன் உரிமையாளர், தனது ஆட்டோவில் பயணித்த பெண் என்பதை கண்டறிந்த ஆட்டோ ஓட்டுநர், அதனை பத்திரமாக ஒப்படைத்தார். இதுகுறித்து அறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் விசுவநாதன், ஆட்டோ ஓட்டுநர் கமாலை நேரில் அழைத்து, அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval