ஒரு பெண் பள்ளி அருகே 2 வாரமாக பாடத்தை கவனித்துக் கொண்டே இருந்தாள். எங்கள் தலைமை ஆசிரியையும் நானும் அந்த பெண்ணை கூப்பிட்டு விசாரிக்க. அவள் நரி குறவர் இன பெண் எனவும், நான் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். வயதிற்கு வந்த காரணத்தால் என்னை திருமணம் செய்ய அத்தை மகன் தொல்லை தருவதால் என் பெரியம்மா இருக்கும் இந்த ஊருக்கு வந்து விட்டேன். எனக்கு படிக்க ஆசை ஆனால் முடியுமானு தெரியல. அதான் நீங்க நடத்துவது பார்த்து பாடம் கவனிக்கிறேன் என்றாள். பகலில் தனியாக இருப்பதால் பாதுகாப்பு கருதி பள்ளியிலே பாடம் கவனிக்க அனுமதித்தோம். அவங்க பெரியம்மாவிடம் கூப்பிட்டு உயர்நிலை பள்ளியில் சேர்க்க நினைத்தோம். அந்த மாணவியும் தன் சொந்த ஊர் சென்று துணி, பை எல்லாம் எடுத்து வந்து ஆர்வத்துடன் வந்து நின்றாள்.
படித்த பள்ளியில் TC தர மாட்டேங்குறாங்க சார் என்றாள். TC தேவை இல்லை மா. EMIS எண் print எடுத்துக் கொடுத்து திங்கள் உன்னை பள்ளியில் சேர்த்து விடுகிறேன் என்றேன்.
திங்கள் அன்று எனக்கு முன்பே அந்த உயர் நிலை பள்ளிக்கு சென்று uniform அணிந்து சென்று விட்டாள். ஆனால் அந்த பள்ளியில் அவளை சேர்க்கவில்லை. விவரம் கேட்க அந்த மாணவியின் பெரியம்மாவை கூப்பிட்டு அங்கே சென்றேன். அவர்கள் அந்த மாணவியை சேர்க்காததற்கு பல்வேறு காரணம் கூறினார்கள். நான் நீங்கள் இந்த மாணவியை சேர்க்க வில்லையென்றால் திருமணம் ஏற்பாடு செய்வர் அவள் கனவு அழியும், ஒரு பெண்ணின் வாழ்க்கை மாறிவிடும் என்றேன். அவர்களோ தமிழ் படிக்கிறாள், ஆங்கிலம் ஒழுங்காக படிக்கவில்லை. C D மாணவியை வைத்து என்ன செய்வது என்கிறார்கள். ஒரு பெண்ணின் வாழ்க்கையை விட CD தான் பெரிதாக நினைக்கும் அந்த தலைமையாசிரியை ஒரு பெண்.
உடனே நன்றி கூறிவிட்டு அருகே இருக்கும் ஊ.ஒ.ந.நி.பள்ளி, H. ஈச்சம்பாடிக்கு மாணவி மற்றும் அவளுடைய பெரியம்மாவையும் கூட்டிச் சென்று சேர்க்க வேண்டி கேட்டேன். உடல் நலக் குறைவால் விடுமுறையில் இருந்தாலும் Phone ல் விவரம் கூறியதும் admission போட்டறலாம் பா என்று கூறிய அந்த தலைமையாசிரியையும் ஒரு பெண். ஒரு வழியாக அந்த பெண்ணை பள்ளியில் சேர்த்து விட்டு வெளியில் வரும் பொழுது. அந்த மாணவி Thank u sir. நானும் உங்கள மாதிரி Teacher ஆவேன் சார் என்று சொன்னதும் என்னையும் அறியாமல் சந்தோசத்தில் ஒரு நொடி கண் கலங்கி போனேன்.
அந்த மாணவியை படிக்க வைக்க நினைத்த அவள் பெரியம்மாவிற்கும், பள்ளியில் சேர்த்துக் கொண்ட திருமதி. செல்வராணி தலைமையாசிரியைக்கும் அந்த மாணவியை எப்படியாவது பள்ளியில் சேர்த்து விட்ருங்க சார் னு என்னை அனுப்பி வைத்த எங்கள் தலைமை ஆசிரியை திருமதி. ஜமுனாராணி அவர்களுக்கும் நன்றி.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval