மின் ஊழியர்களை தொடர்ந்து கேரள மருத்துவக்குழுவை அனுப்பினார் முதல்வர் பினராயி விஜயன்...!
கஜா புயலால் சேதமைந்த மின்கம்பங்களை சரி செய்ய 2 நாட்களுக்கு முன்னதாக மின் ஊழியர்களை அனுப்பியதை தொடர்ந்து தற்பொழுது தற்பொழுது 15 பேர் கொண்ட மருத்துவக்குழுவை கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பினார்.
தமிழ்நாட்டில் கஜா புயலின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து புலம் பெயர்ந்து, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மாநிலம் முழுதும் சுமார் 13 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின் விநியோகமும், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகமும் தடைபட்டுள்ளதால் மக்களின் வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் புயலால் பெரிதும் மக்கள் சுகாதாரத்தில் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது, இதனை கருத்தில் கொண்டு கேரள அரசு 15 பேர் கொண்ட சுகாதாரக் குழுவை நாகை மாவட்டத்திற்கு அனுப்பி பணிகளை மேற்கொள்ளும் படி முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக மின் கம்பங்களை சரி செய்ய கேரள மின் ஊழியர்களை புதுக்கோட்டைக்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval