Friday, October 26, 2018

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்?

Image may contain: 1 person, sitting, text and food
அஸ்ஸலாமு அலைக்கும் ஜும்மா முபாரக்
#SlavesOfAllah
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்?
அம்பானியா? அல்லது அதானியா?
இரண்டு பேரும் கிடையாது.... ஹைதராபாத்தை சேர்ந்த அஸார் மக்சுஸி.
ஒவ்வொரு நாளும் வீடில்லாத, ஏழ்மையான மக்களுக்கு நம் நாட்டில் சரியான உணவு கிடைக்காமல் பட்டினியாக இருக்கிறார்கள். அதுவும் ஐதராபாத்தில் தபீர்பூரா பாலத்தின் அடியில் இதைப்போல் பலரை காணலாம். இங்கு இப்போது ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தைகளும் வரிசையாக தட்டை கையிலேந்தி தங்கள் முறைக்ககாக காத்திருக்கின்றனர்.
இவர்கள் யாரும் பட்டினியாக படுப்பதில்லை காரணம் இந்த பணக்காரன் அஸார் மக்சுஸி..
36 வயதான இந்த நபர் ஹைதராபாத்தின் பழைய சிட்டியில் வசிப்பவர், இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும் இங்கு வந்து இந்த ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
இதைப்பற்றி அவர் கூறுகையில், ஒரு நாள் சைக்கிள் பஞ்சர் ஆனதால், இந்த பிரிட்ஜின் அடியில் இருந்து குறுக்கு வழியில் இரயில் நிலையம் செல்லலாம் என்று வந்தேன். அப்போது அங்கு பல ஊனமுற்றவர்கள் இருந்தார்கள், அதில் ஒரு பெண் என்னிடம் வந்து சாப்பிட வேண்டும் பல நாள் ஆயிற்று, எதாவது கொடுங்கள் என்றார். அவர் பெயரும் நியாபகம் உள்ளது, அவர் பெயர் லட்சுமி.
நான் அவருக்கு உணவு வாங்கி கொடுத்தேன், மேலும் பலரும் வந்து சாப்பாடு கேட்டார்கள், என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தேன். பிறகு என் வேலை முடித்து கொண்டு வீடு திரும்பினேன். இரவெல்லாம் அவர்களின் பசியே என் மனதை வாட்டியது..
அன்று முடிவு செய்தேன், என்னால் எவ்வளவு முடிகிறதோ அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும்., ஏனென்றால் என்னுடைய 4 வயதில் என் தந்தையை இழந்து, தாயின் போராட்டத்தால் வளர்ந்தவன், பல நாள் அந்த பட்டினியின் கொடுமையை அனுபவித்தவன்.
இதைப்பற்றி மனைவியிடம் பேசினேன், இறைவன் கொடுத்த பெரிய கொடை என் மனைவி. அவளின் உதவியால் முதன்முதலாக 15 பேருக்கு சாப்பாடு செய்து கட்டி கொடுத்தார், இதை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தினமும் 50 பேருக்கு அதிகரித்தோம்.
நான் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பூசும் வேலை செய்கிறேன், என் வருமானத்தில் இதற்க்கு மேல் செய்ய இயலவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது, ஏனெனில் தினமும் 50 பேருக்கு கொடுக்கும் போது மீதமுள்ளவர்களுக்கு கொடுக்க முடியவில்லையே என்று.
ஒன்றரை வருடத்திற்கு பிறகு ஒரு நண்பனை கடவுள் என்னிடம் அனுப்பி வைத்தார், அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர், அவர் என்னுடைய இந்த சேவையை பார்த்து எனக்கு உதவினார், அந்த உதவி மறக்க முடியாத உதவியாகும்.
அவர் ஒவ்வொரு மாதமும் 25கிலோ எடையுள்ள 16 மூட்டை அரிசி வழங்குகிறார்.
இவரின் இந்த உதவிக்கு பிறகு...
இப்போது குறைந்தது 100 பேருக்காவது ஒரு வேளை உணவு வழங்கிய திருப்தி கிடைக்கிறது என்று கூறி, அங்குள்ள ஏழை சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்று விட்டார்.
ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை செலவு செய்து 100 பேருக்கு ஒரு வேளை உணவு வழங்குவது மிகப்பெரிய விஷயம் அவர் செய்யும் தொழில் சின்னதாக இருக்கலாம், ஆனால் மனசு மிகப்பெரியது..
பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட செய்தியில் உலகத்தில் உள்ள முதல் மூன்று பணக்காரர்களின் பணத்தை வைத்து 48 ஏழை நாடுகளின் வறுமையை அடியோடு போக்கிவிடலாமாம்
தன் தேவைக்கு போக மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உதவி செய்யாமல் இருப்பவர்கள் உண்மையான பணக்காரர்கள் அல்ல
தனது செலவு போக அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி ஏழைகளுக்கு செலவு செய்பவர்களே மிகப்பெரிய பணக்காரர்கள்..
மனசார சொல்ல வேண்டும் இவர் மனதால் மிகப்பெரிய பணக்காரர்..
அல்லாஹ் (SWT) இது போன்ற மறுமை வாழ்வை வெற்றி அடைய செய்யக்கூடிய நற்செயல்களை செய்ய கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்புரிவானகா-ஆமின்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval