Wednesday, June 26, 2019

மரண அறிவிப்பு

எனது தாயார் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்,  அன்னாரின் நல்லடக்கம் நாளை 27/06/19 காலை 8 மணிக்கு தக்வா பள்ளி மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமைவாழ்விற்காக இறைவனிடத்தில் பிராத்திக்க வேண்டுகிறேன்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

Inline imageS.H.அஸ்லம்
முன்னால் சேர்மன்
                                                           அதிராம்பட்டினம்.

Wednesday, June 19, 2019

லஞ்சம் தவிர் நெஞ்சை நிமிர்

Inline image

லஞ்சம்_தவிர்_நெஞ்சை_நிமிர் என்ற வாசகத்திற்கு உரிய அதிகாரி தான் இவர்.# #இளையான்குடி #காவல் சார்பு ஆய்வாளார் #திரு ரஞ்சித்#அவர்கள் பொதுமக்களிடம் அன்பாகவும் ரவுடிகளிடம்  அதிரடியாகவும் நடந்து கொள்வார்.இவர் பொதுமக்களின் பிரச்சினைகளை மிக சாதுரியமாக பேசி தீர்த்து வைபார்.இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் பதவி ஏற்றவுடன் அந்த பகுதில் மணல் திருட்டு, வழிப்பறி, ரவுடிசம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.அத்துடன் டாஸ்மார்க் கடைகளில் ஏற்படும் சண்டை மற்றும் பார் காலை 12 மணிக்கு முன் திறந்தாள் தக்க நடவடிக்கை எடுப்பார்.

Tuesday, June 18, 2019

மரண அறிவிப்பு - எம்.எம் தீன் முகமது (வயது 75)

அதிராம்பட்டினம், மேலத்தெரு சின்ன மின்னார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எம் முகமது மினார் அவர்களின் மகனும், மர்ஹூம் க.செ.அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எம் கோஸ் முகமது, எம்.எம் ஹைதர் அலி ஆகியோரின் சகோதரரும்,  சேக் தாவூது, நிஜாமுதீன். ஃபயாஸ் அகமது ஆகியோரின் தகப்பனாரும், பிஸ்மில்லாகான், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய எம். எம் தீன் முகமது (வயது 75) அவர்கள் இன்று காலை காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

Monday, June 17, 2019

கொசு (ரு) தகவல்




கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி, நம் வீட்டிலுள்ள மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.

ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.

Tuesday, June 4, 2019

அதிரையில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.! [ புகைப்படங்கள் }

Inline imageஇன்று 05/06/2019 இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் நோன்புப் பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டன.. அதிரையிலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப் பட்டன. இன்று காலை பல்வேறு பகுதிகளில் நடந்த பெருநாள் தொழுகையில்  அதிரையர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு  தொழுது பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

கலிபோர்னியாவில் அதிரையர் நோன்பு பெருநாள் சந்திப்பு (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள நோவாட்டோவில்   இன்று 05/06/2019 நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு  வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மற்றும் பல நாட்டவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நோன்புப்பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் சந்திப்பு ! [ புகைப்படங்கள் ]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இன்று 05/06/2019 புதன்  கிழமை  நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அஸ்டோரியா பார்க்கில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் பெருநாள் நிகழ்ச்சி

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள லக்கிம்பாவில்unaited muslims of Australiya வினர் iஇன்று 04/06/2019 பெருநாள் தொழுகையை   சிறப்பாக
நடத்தினர்இதில்  அதிரையர்கள் ஒன்றுகூடி தங்களின் வாழ்த்துக்களை அன்பு டன் பகிர்ந்து கொண்டனர்