ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு பசு மாடுகள் மட்டும் இருந்தன.
அதனால் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்.
ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.
அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையைச் சொன்னான்.
