Wednesday, November 19, 2014

திகதி [ தேதி ]

more of horses flowers 2014 calendar printable 2014 calendar ready to ...நாட்களைக் கடத்திச் செல்லும்
நல்லதொரு ஆயுதமாம் தேதி

நாளிகையைக் கணக்கில் கொண்டு
நேரங்கள் நகர்ந்து சென்று
நடு நிசியானதும்
நாள் தவறாது மாறிவரும் தேதி

முப்பத்தியொரு  பக்கங்களேயுள்ள புத்தகம்
அதன் நிர்ணயிப்பில் உலகு இயங்கும் அதிசயம்

வாரமும் மாதமும்
வருடங்களாய்த் திரண்டு
வாழ்க்கையை வயதோடு கணக்கிடும்
வஞ்சகமில்லா
எண்களைப் பெற்றதுவாம் திகதி

உண்ணும் பொருளுக்கும்
உண்ணாப் பொருளுக்கும்
உத்திரவாதமளிக்குமாம் தேதி

வண்ண நிகழ்வுக்கும்
வாழ்க்கையின் அனைத்திற்கும்
வாகை சூடி வருமாம் தேதி

உன்னைக் கணக்கிட்டே நடக்கும்
இவ்வுலக காரியங்கள்
உன்னை மறந்திட்டே நடக்கும்
அவசர முடிவுகள்

பக்கத்துக் கிழமைகள் கூட மறந்து போகும்
பாரினில்  பிறந்திட்ட தேதிமட்டும் நிலைகொள்ளும்

தேதியை மறப்பவர்
தேசத்தை மறப்பவர்
தேசத்தின் விடுதலைக்கு
தேதியையே நினைத்திடுவர்
அதிரை மெய்சா
குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 09-10-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இந்த கவிதை கானொளியில் 6 வது  நிமிடம் 20 வது நொடியில் வாசிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval