Saturday, November 22, 2014

இந்திய தேசிய இயக்கம்


Image result for gandhi1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் கானிங்பிரபு (Lord Canning) காலத்தில் (1856-62) நடந்தது. 

1856-ல் இந்திய இராணுவத்தில் புதிய என்பீல்டு துப்பாகிகள் (Enfield rifles) அறிமுகப் படுத்தப்பட்டன. அதனுடைய ரவைகளில் பசு, பன்றி கொழுப்புக் கலவை தடவப்பட்டு இருந்ததாக கருதப்பட்டது.
 

காங்கிரசின் ஆரம்பகாலமான 1885-லிருந்து 1905 வரையிலான காலத்தை மிதவாதிகளின் காலம் (Moderates Period). 

1905-லிருந்து 1919 வரை தீவிரவாதிகள் காலம் (Exteremist Period). 

1919-லிருந்து 1947 வரை காந்தியின் காலம் (Gandhian Era). 

தாதாபாய் நௌரோஜி, டபிள்யூ.சி. பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பெரோஸா மேத்தா, பக்ருதீன் தியாப்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே, டி.ஈ. வாச்சா, ஆனந்த மோகன்போஸ், ராஷ்பிகாரி கோஷ் ஆகியோர் முக்கியமான மிதமான தலைவர்கள். 

அரவிந்த் கோஷ் இந்தயாவில் தீவிரவாத தேசியம் தோன்றக் காரணமாக இருந்தவர். 

1905-ல் வங்கப் பிரிவினை ஏற்பட்டது. 

1907 சூரத் மாநாட்டில் ராஷ்பிகாரி கோஷ் தலைமையில் மிதவாதிகளும், அரவிந்த கோஷ் தலைமையில் தீவிரவாதிகளும் தனித்தனியாக தீர்மானங்கள் இயற்றியதால் காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. 

1924-ம் ஆண்டு இந்துஸ்தான் குடியரசு சங்கம் (Hindustan Republican Association) சச்சின் சன்யால் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்மீது இரயில் கொள்ளை வழக்கான கக்கோரி சதி வழக்கு (Kakori Conspiracy Case) போடப்பட்டு ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன்லால் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். 

சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட லாலா லஜபதிராயை பிரிட்டீஷ் காவலர்கள் தாக்கியதால் பகத்சிங், சந்திரசேகர், ஆசாத், ராஜகுரு ஆகியோர் காவல் அதிகாரி யான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர். 

பகத்சிங், பி.கே. தத் ஆகியோர் மத்திய சட்ட மன்றத்தில் வெடிகுண்டை வீசி கைதாயினர். பின்னர் 1931, மார்ச் 23 அன்று பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். 

ஜட்டின் தாஸ் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். 

1905-ம் ஆண்டு சியாம்ஜி கிருஷ்ணவர்மா லண்டனில் இந்திய இல்லத்தை தொடங் கினார். 

இது பயங்கரவாதிகளின் புரட்சி மையமாகவும் பயன்பட்டு வந்தது. 

அமெரிக்காவில் 1913-ம் ஆண்டு சோகன் சிங் பக்னா காதர் கட்சியைத் தோற்றுவித்தார். இதன் பொதுச் செயலாளரான லாலா ஹர்தயாள் புரட்சிவாதக் கருத்துகளைப் பரப்பி வந்தார். 

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கைக்கு (Policy of Divide and Rule) முதல் தர முன்னுதாரணமாக விளங்கியது வங்கப் பிரிவினை. 

பிரிவினை நாளான 1905, அக்டோபர் 16 அன்று தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டது. தாகூர் பிரிவினையை எதிர்த்து அமர்சோனார் பங்களா என்ற பாடலை இயற்றினார். 

1906-ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுதேசி இயக்கம், விதேசி இயக்கம், தேசியக் கல்வித்திட்டம், சாத்வீக எதிர்ப்பு (Passive resistence) குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1906 ஆகஸ்ட் 15-ல் தேசிய கல்விக் குழு அமைக் கப்பட்டதன் அடிப்படையில் தேசியக் கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டு அரவிந்த் கோஷ் அதன் தலைவரானார். 

வங்காளப் நவாப் சலிமுல்லாகானின் முயற்சி யால் முஸ்லீம் மக்களுக்காக 1906 டிசம்பர் 30-ல் அகில இந்திய முஸ்லீம் லிக் (All India Muslim League) அமைக்கப்பட்டது. அதன் நிரந்தரத் தலைவராக ஆகாகான் தேர்ந்தெடுக் கப்பட்டார். 

சர் சையத் அகமதுகானால் ஊக்குவிக்கப்பட்டு முஸ்லீம் கல்வி காங்கிரஸ் (Muslil Educational Congress) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது காங்கிரசுக்கு இணையான அமைப்பாக விளங்கியது. 

இவரே ஐக்கிய இந்திய நாட்டுப் பற்றுடையோர் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். 

1915-ம் ஆண்டு பம்பாயில் சின்கா தலைமையில் கூடிய காங்கிரஸ் மாநாடு தீவிரவாதிகளை மீண்டும் காங்கிரசில் சேர்க்க அனுமதித்தது. 

1916-ம் ஆண்டு லக்னோ மாநாட்டில் மிதவாதி களும், தீவிரவாதிகளும் இணைந்தனர். இதற்கு திலகரும், அன்னிபெசன்ட் பெரும் பங்காற் றினர். 

இந்திய தன்னாட்சிக் கழகம் திலகரால் 1916 ஏப்ரல் மாதத்தில் புனே நகரில் தொடங்கப் பட்டது. 

"கேசரி', "மராத்தா' போன்ற திலகரின் பத்திரிக்கைகள் தன்னாட்சிக் கருத்துக்களைப் பரப்பின. 

மான்டேகு பிரபு 1917 ஆகஸ்ட் 20-ல் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதுவே ஆகஸ்ட் பிரகடனம் எனப்படுகிறது. இதன்படி நிர்வாகத்தில் இந்தியர்கள் அதிகம் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்படும் என கூறியது. 

1919 மார்ச் மாதம் பம்பாயில் சத்யாகிரக சபை தோற்றுவிக்கப்பட்டது. 1919 மார்ச் 30-ம் நாள் சத்யாகிரக நாளாக அனுசரிக்க காந்தி மக்களைக் கேட்டுக் கொண்டார். 

1919 ஏப்ரல் 13-ம் நாள் ஜாலியன் வாலாபாக்கில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தடை உத்தரவு ஆணையை மீறியதாகக் கூறி ஜெனரல் ரெஜினால்டு டயர் தனது படையினரை சுடுமாறு உத்தரவிட்டார். இதில் 1500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 

இந்திய வைசிராய் மாண்டேகுவும், செம்ஸ்போர்டு என்பவரும் இணைந்து 1919-ம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தை இயற்றினர். மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் என்று பெயர். இச்சட்டத்தின்படி மாநிலங்களில் இரட்டையாட்சி முறை அறிமுகப்படுத் தப்பட்டது. 

கிலாபத் இயக்கத்தின் ஒரு பகுதியாக மலபாரில் நடைபெற்ற ஒரு பயங்கரவாத நிகழ்ச்சியே மாப்ளா கலகம் எனப்படும். 

ஒத்துழையாமை இயக்கம்- 1920-22 (Non-Co-operation Movement) நடைபெற்றது. 

1920 மார்ச் 10-ம் நாள் கிலாபத் இயக்கம் பின் பற்றுவதற்கான செயல்திட்டத்தை (Gandhi's Manifesto) காந்தி வெளியிட்டார். 

கோரக்பூர் அருகி லுள்ள சௌரிசௌரா எனுமிடத்தில் வன்முறை கட்டுக்கடங்காது போனதால் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி 1992 பிப்ரவரி 12-ல் கைவிடுவதாக அறிவித்தார். 

சி.ஆர். தாஸ், மோதிலால் நேரு ஆகியோரின் சட்டமன்ற நுழைவுத் தீர்மானம் 1922 கயா காங்கிரஸ் மாநாட்டில் தோல்வியுற்றதால் அவர்கள் 1923 ஜனவரி முதல் நாள் சுயராஜ்ய கட்சியைத் தோற்றுவித்தனர். சித்தரஞ்சன் தாஸ் கட்சியின் தலைவராகவும், மோதிலால் நேரு அதன் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

1929-ம் ஆண்டு இறுதியில் லாகூரில் ராவி ஆற்றின் கரையில் கூடிய காங்கிரஸ் மாநாட் டிற்கு ஜவகர்லால் நேரு தலைமை தாங்கினார். காங்கிரசில் பெரும்பான்மையோர் பூர்ண சுயராஜ்யம் என்பதை ஆதரித்ததால் லாகூர் மாநாட்டில் முழு விடுதலை அல்லது பூர்ண சுயராஜ்யம் என்பதே இறுதி கோரிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

1929 டிசம்பர் 31-ம் நாள் மூவர்ண கொடியை நேரு பறக்கவிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் நாளை முழு சுதந்திர தினமாக கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த நாளே இந்தியாவின் குடியரசு நாளாக மலர்ந்தது. 

உப்புச் சத்தியாகிரகத்தின்கீழ் காந்தியின் தண்டியாத்திரை 1930 மார்ச் 12-ம் நாள் 78 உறுப்பினர்களுடன் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கியது. 

தமிழ்நாட்டில் ராஜாஜி நூறு தொண்டர்களுடன் திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்குச் சென்று உப்புச்சட்டத்தை மீறினார். 

டி.பிரகாசமும், கே.நாகேஸ்வரராவும் மெரீனா கடற்கரையில் உப்புச் சத்தியாகிரகம் செய் தனர். 

லண்டனில் 1930 நவம்பரில் தொடங்கிய முதலாவது வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை.

முதல் வட்டமேசை மாநாட்டிற்கு பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு தலைமை தாங்கினார். 

2-வது வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொண்டார். இது லண்டனில் 1931 செப்டம்பர் 7-ல் தொடங்கியது. சிறுபான்மையோரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் குறித்து பிரதானமாக விவாதிக்கப்பட்டது. அம்பேத்கர், ஜின்னா, ஆகாகான் போன்றோர் காந்தியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வகுப்புவாதம் குறித்து ஒருமித்த முடிவேதும் காணமுடியாமல் திரும்பினார் காந்தி. 

சட்டமறுப்பு இயக்கத்தை 1932-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் துவக்கினார். காந்தி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். 

இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரித் தீர்வு குறித்து உடன்பாடு ஏற்படாததால் பிரிட்டிஷ் பிரதமர் மக்டொ னால்டு தனது வகுப்புத் தீர்வை 1932 ஆகஸ்ட் 17-ம் நாள் அறிவித்தார். 

இதன்படி அனைத்து சிறுபான்மை யினருக்கும் (முஸ்லீம், சீக்கியர்கள், ஐரோப்பியர், தாழ்த்தப்பட்டோர்) தனித்தொகுதிகள் ஒதுக்கப்படும். 

1932-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி 3-வது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் தொழிற்கட்சியும், இந்திய தேசிய காங்கிரசும் பங்கு பெறவில்லை. 

1935 பிப்ரவரியில் பிரிட்டிஷ் பாராளுமன்றத் தில் இந்திய அரசாங்கச் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலமானது. சைமன் கமிஷன் அறிக்கை, நேரு அறிக்கை, வட்டமேசை மாநாட்டின் வெள்ளை அறிக்கை 1933, முதலியன ஆகும். பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் நீளமான சட்டம் 1935-ம் ஆண்டு சட்டமே ஆகும். 

1937-ம் ஆண்டு தேர்தலில், மொத்தமுள்ள 11 மாநிலங்களில் காங்கிரஸ் 7 மாநிலங்களில் ஆட்சியை நிறுவியது. சிந்துவில் மட்டுமே முஸ்லீம் லீக் ஆட்சி அமைத்தது. அசாமில் முஸ்லீம் கூட்டணி அரசு நிறுவப்பட்டது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒருமித்த ஆட்சி ஏற்பட ஒரு பாராளுமன்ற துணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழு காங்கிரஸ் மேலிடம் என அழைக்கப்பட்டது. இராஜேந் திர பிரசாத், மௌலானா
அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் படேல் ஆகியோர் இதன் உறுப்பி னர்கள் ஆவர். 

1937-ம் ஆண்டு தேர்தல் காங்கிரஸ் - லீக் கட்சி களிடையே பிளவைத் தோற்றுவித்தது. காங்கிரசின் அமோக வெற்றி முகமது அலி ஜின்னாவை கடுமையாக பாதித்தது. ஜின்னா காங்கிரஸ் கட்சியை "இந்து வகுப்புவாதக் கட்சி' எனக் கருதி, அதை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். 

1940 லாகூர் முஸ்லீம் லீக் மாநாட்டில் முதன் முறையாக ஜின்னா தமது இருநாட்டுக் கொள்கையை தெளிவுபடுத்தினார். முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக உள்ள பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற தனிநாடு அளிக்கக் கோரி னார். 

பாகிஸ்தான் என்ற சொல்லை உருவாக்கியவர் ரகமத் அலி, முகமது இக்பால் 1930-ம் ஆண்டில் நடைபெற்ற முஸ்லீம்லீக்கின் முதல் மாநாட்டிலேயே இருநாட்டுக் கோட்பாட்டை ஏற்படுத்தினார். 

கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழு 1942 மார்ச் 22-ம் நாள் இந்தியா வந்தது. 

1942 ஜூலை 14-ம் நாள் வார்தாவில் காங்கிரஸ் செயற்குழு கூடி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றியது. 

1857-க்குப் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்தான் மக்கள் வலிமை கொண்டு அரசை எதிர்க்கலாயினர். 

ராஜாஜியின் திட்டம்- 1944. 

காந்தி-ஜின்னா சந்திப்பு- 1944. 

லியாகத் - தேசாய் உடன்பாடு- 1945 (Liaquat - Desai Pact) காந்தி - ஜின்னா சந்திப்பு தோல்வி அடைந்ததை அடுத்து காந்தியின் நண்பரான புலாபாய் தேசாயும், லியாகத் அலிகானும் 1945 ஜனவரி மாதம் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இதுவே லியாகத்-தேசாய் உடன்பாடு எனப்படுகிறது. 

தேசாய்-லியாகத் தோல்வியைத் தொடர்ந்து இந்தியாவில் அதிகார மாற்றம் பற்றிய ஒரு முடிவுக்கு வர விரும்பிய வைசிராய் வேவல் பிரபு ஓர் அறிவிப்பை 1945-ல் வெளியிட்டார். இதுவே வேவல் திட்டம் எனப்படுகிறது. 

வேவல் பிரவு 1945 ஜூன் 25-ம் தேதி சிம்லாவில் கூட்டினார். கவர்னர் ஜெனரலின் நிர்வாகக் குழுவை இந்தியர்கள் மட்டுமே கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்பதே வேவல் திட்டத்தின் அடிப்படையாகும். 

சமய சீர்திருத்த இயக்கங்கள் :--------- 

1. அக்பர். 

மொகலாய சக்ரவர்த்தியான அக்பர் "தீன் இலாஹி' என்ற பொது சமயம் ஒன்றை நிறுவி னார். 

2. ஆத்மராம் பாண்டுராங். 

ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக "பிரார்த்தனை சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். 

3. இராமானுஜர். 

வைணவ ஆச்சாரியரான இவர் "விசிஷ்டாத் வைதம்' என்ற கொள்கையை போதித்தார். 

4. சங்கரர். 

"அத்வைதம்' என்ற சமயத் தத்துவத்தை போதித்தார். 

5. மத்வாச்சாரியார். 

"துவைதம்' என்ற சமயக் கொள்கையை போதனை செய்தார். 

6. மெய்கண்டார். 

இறைவனிடம் பக்தி செலுத்தினால் முக்தி அடையலாம் என்ற கொள்கையை பரப்பினார். "சிவஞான போதம்' என்ற நூலை எழுதினார். 

7. சைதன்யர். 

ஜாதி வேற்றுமை, சமயச்சடங்குகளைக் கண்டித்தவர். வட இந்திய வைணவ சமய ஆச்சாரியர்களுள் பெரியவர். 

8. கபீர்தாசர். 

அல்லாவும், இராமானுஜமும் இரு பெயருடைய ஒரே இறைவன் என்றார். இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார். 

9. தயானந்த சரஸ்வதி. 

"ஆரிய சமாஜத்தைத்' தோற்றுவித்தவர். 

10. இராஜாராம் மோகன்ராய். 

"பிரம்ம சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். உடன்கட்டை ஏறுதலை எதிர்த்தார். 

11. குருநானக். 

சீக்கிய மதத்தை நிறுவினார். 

12. மகாத்மா காந்தி. 

தீண்டாமை ஒழித்தல், மதுவிலக்கு, பெண்களுக்கு சம உரிமை அளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார். 

13. பண்டித ரமாபாய். 

"ஆரிய மகளிர் சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். மும்பையில் "சாரதா சதன்' புனேயில் "கிருபா சதன்' "முக்தி மிஷன்' போன்ற நிலையங்கள் ஏற்படுத்தி விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்காக பாடுபட்டார். 

14. முத்துலெட்சுமி ரெட்டி. 

சென்னையில் "அவ்வை இல்லம்', அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்றவற்றை நிறுவி சமூகத் தொண்டாற்றியவர். 

15. ஜோதிபாபூலே. 

"சத்ய சோதன சமாஜம்' என்ற அமைப்பை நிறுவினார். 

16. கந்துகுரி வீரேசலிங்கம். 

பெண் கல்வி, விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர். 

17. ஸ்ரீநாராயண குரு. 

"ஸ்ரீநாராயண குரு தர்மபரிபாலன யோகம்' என்ற அமைப்பை நிறுவி மூட நம்பிக்கைகளைக் கண்டித்தார். 

18. இராமலிங்கர். 

"சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினார். 

19. விவேகானந்தர். 

"ராமகிருஷ்ணா மிஷன்' என்ற சங்கத்தை நிறுவினார். 

தலைவர்களும் தொடர்புடைய பத்திரிகைகளும் :----- 

செங்கோல் - ம.பொ. சிவஞானம். 

குடியரசு, விடுதலை - பெரியார் ஈ.வெ.ராமசாமி. 

திராவிட நாடு, காஞ்சி - அறிஞர் அண்ணாதுரை. 

ஞானபானு - சுப்பிரமணிய சிவா. 

பாரதி - வ.உ.சிதம்பரனார். 

தேசபக்தன், நவசக்தி - திரு.வி.க. 

இந்தியா - பாரதியார். 

கேசரி, மராட்டா - திலகர். 

ஒபினியன், ஹரிஜன் - காந்திஜி. 

காமன்வீல் - அன்னிபெசன்ட். 

புனைப்பெயர்கள் :------- 

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு. 

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி. 

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல். 

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ். 

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான். 

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய். 

லோகமான்யர் - பாலகங்காதர திலகர். 

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர். 

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை. 

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர். 

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார். 

வைக்கம் வீரர் - தந்தை பெரியார். 

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன். 

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர். 

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி. 

இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள் :-------- 

கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள். 

ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர். 

சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான். 

பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே. 

சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா. 

ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி. 

பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய். 

அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி. 

சாரதா சதன் - பண்டித ராமாபாய். 

சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி 

வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல். 

சாரணர் படை - பேடன் பவுல். 

இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம். 

ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர். 

செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட். 

இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ். 

சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ். 

சுதந்திர கட்சி - ராஜாஜி. 

இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே. 

சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார். 

1. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங். 

2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி. 

3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே. 

4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர். 

5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி. 

6. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி. 

7. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி. 

8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி. 

16. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி. 

17. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி. 

18. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல். 

19. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே. 



வரலாற்றுச்சட்டங்கள் :------- 

1773 - ஒழுங்குமுறைச் சட்டம் 

1784 - பிட் இந்தியச் சட்டம். 

1786 - திருத்தும் சட்டம். 

1793 - சாசனச் சட்டம். 

1813 - சாசனச் சட்டம். 

1833 - சாசனச் சட்டம். 

1853 - சாசனச் சட்டம். 

1858 - அரசு பேரறிக்கை. 

1861 - இந்திய கவுன்சில் சட்டம். 

1874 - இந்திய கவுன்சில் சட்டம். 

1878 - இந்திய மொழிகள் சட்டம். 

1882 - தலசுய ஆட்சி சட்டம். 

1883 - இல்பர்ட் மசோதா. 

1889 - ஆண்டு சட்டம். 

1892 - இந்திய கவுன்சில் சட்டம். 

1909 - இந்திய கவுன்சில் சட்டம். 

1919 - இந்திய ஆட்சி சட்டம். 

1919 - ரௌலட் சட்டம். 

1937 - இந்திய ஆட்சி சட்டம். 

1947 - இந்திய சுதந்திரச் சட்டம். 

1950 - இந்திய அரசியல் சட்டம். 

சங்கங்கள், கட்சிகள் மற்றும் தொடர்புடையவர்கள் :------ 

1. திராவிட முன்னேற்றக் கழகம் - சி.என்.அண்ணாதுரை. 

2. தியாசாபிகல் சொசைட்டி, சுதந்திரச் சிந்தனை சொசைட்டி - அன்னி பெசன்ட். 

3. சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொஸைட்டி - கோபாலகிருஷ்ண கோகலே. 

4. டான் சொஸைட்டி - சதீஷ் சந்திரா. 

5. பேட்ரியாடிக் அசோசியேஷன் - சையது அகமது கான். 

6. இந்தியன் அசோசியேஷன் - சுரேந்திரநாத் பானர்ஜி. 

7. சேவா சதனம் - சுப்புலெட்சுமி. 

8. சுயராஜ்ஜிய கட்சி, சாரதா சதன், கிருபா சதன் - சி.ஆர்.தாஸ், ரமாபாய் (பண்டிட்). 

9. திராவிடர் கழகம் - பெரியார் ஈ.வே.ராமசாமி. 

10. கலாஷேத்திரா - ருக்மணிதேவி அருண்டேல். 

11. பார்வேட் பிளாக் - நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ். 

12. சர்வன்ட்ஸ் ஆஃப் பீபுள் சொஸைட்டி - லாலா லஜபதிராய். 

13. ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர். 

14. ஏஷியாடிக் சொஸைட்டி - வில்லியம் ஜோனிஸ். 

15. காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி - ஜெயபிரகாஷ் நாராயண். 

16. சால்வேஷன் படை - ஜெனரல் பூத். 

17. ஆல் இந்திய ஜனசங்கம் - ஷியாம் பிரசாத் முகர்ஜி. 

18. இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம். 

வரலாற்றை மனதில் கொள்வோம் என்றும்..... 

உங்கள் செ. சத்யாசெந்தில், முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு, மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.
பதிப்புரை N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval