Monday, November 3, 2014

இஸ்லாமும் வட்டியும்


... rates bank 1 2 years in percentage 2 3 years axis bank 8 50 9 00 9 00வட்டி வாங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளதைப் போன்று வட்டி கொடுப்பதையும் தடுத்துள்ளார்கள்.

வட்டி தொடர்புடைய வேலைகைளை நீங்கள் செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களைச் சபித்துள்ளார்கள்.

வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (3258)

..........................................................................................................

கேள்வி
இஸ்லாமிய வங்கியில் கடன் வாங்குவது கூடுமா? 

பதில் 
       நம் நாட்டில் உள்ள சில இஸ்லாமிய நிறுவனங்களும் அபுதாபி போன்ற சில இஸ்லாமிய நாடுகளும் ஷரீஅத் பைனான்ஸ் என்ற பெயரில் தந்திரம் செய்து வட்டி வாங்கிக்கொண்டிருக்கின்றன. 
    
      இஸ்லாமிய வங்கி என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த நிறுவனத்திடம் ஒருவர் கார் வாங்க பத்து லட்சம் ரூபாய் கடனாக கேட்டால் காரை நாங்களே வாங்கித் தருகிறோம் என்று சொல்வார்கள். 
    
      இந்த வங்கி பத்து லட்சம் ரூபாய்க்கு  இவர் கேட்ட காரை வாங்கி இவரிடம் 11 லட்சத்துக்கு கொடுக்கும். இவர் குறிப்பிட்ட காலத்துக்குள் 11 லட்சத்தை கட்ட வேண்டும். வியாபாரம் என்ற பெயரில் வட்டி வாங்குவதற்காக இவ்வாறு தந்திரம் செய்கின்றனர். 
    
      10 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் காரை 11 லட்சம் கொடுத்து எந்த அறிவாலியும் வாங்க மாட்டான். வங்கியில் வாங்கினால் கடன் கிடைக்கும் என்பதற்காகவே வங்கியிடம் 11 லட்சத்தை செலுத்துகிறான். கடனுக்காக கூடுதல் தொகையை செலுத்துவது தான் வட்டி ஆகும். இந்த அம்சம் இந்த பைனான்ஸில் உள்ளது. 
    
       மேலும் இந்த நிறுவனம் வாகனங்களை விற்கும் தொழிலை செய்யவில்லை. தான் கொடுக்கும் கடன் தொகைக்கு கூடுதல் பணத்தை பெறுவதற்காகவே வாகனத்தை வாங்கி தந்திரம் செய்கின்றது. 
    
       இதில் வட்டி என்ற அம்சத்தோடு மார்க்கம் தடைசெய்துள்ள இன்னொரு அம்சமும் அடங்கியுள்ளது. இருவருக்கு மத்தியில் வியாபாரம் நடக்கும் போது தேவையில்லாமல் இடையில் குறிக்கிட்டு பொருளின் விலையை உயர்த்திவிடுவது கூடாது. 
    
        பத்து லட்சம் ரூபாய்க்கு கார் வாங்க நினைப்பவரிடம் இந்த நிறுவனம் குறுக்கிட்டு பதினோறு லட்சமாக உயர்த்திவிடுகின்றது. இந்த அடிப்படையில் இது தவறான முறையாக உள்ளது. 
    
        எனவே இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் கொடுத்த பணத்தை விட கூடுதலாக பணம் நம்மிடம் வாங்குவார்களேயானால் அவர்களிடம் நாம் கடன் வாங்கக் கூடாது. இது தெளிவான வட்டியாகும். 

........................................................................................

ஒரு சமுதாயத்தின் மீது ஒரு பொருளை உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டால் அதை வியாபாரம் செய்வதையும் தடுத்து விடுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 3026 அஹ்மத் 2111

.......................................................................................

திருக்குர்ஆன் அத்தியாயம் 2-275....281


275. வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83 "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும்
செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

277. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

278. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!84

279. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

280. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.73

281. அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை1 அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர்கள் உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.265 அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

Thank You : http://www.onlinepj.com

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval