அங்கு அமர்ந்திருந்த மக்களுக்கு அது நல்ல ஒரு என்டர்டெயிண்ட்மண்டாக இருந்திருக்கும் என்பது அவர்களின் சிரிப்பிலிருந்து தெரிகின்றது.
”எப்பா சாமி நீ மொழி பெயர்த்தது போதும்பா” எனக் கூறும் அளவிற்கு அமித்ஷாவும் அவரது மொழிபெயர்ப்பாளரும் ஒருவருக்கொருவர் மேடையில் முட்டு மோதிக் கொண்டனர்.
அமித்ஷா மோடியை பவர் ஹவுஸ் எனக் கூற , மொழிபெயர்ப்பாளர் காங்கிரசை பவர் ஹவுஸ் என மாற்றிக் கூற அங்கிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
என்னடா இது நம்ம மோடிய பவர் ஹவுஸ் தானே சொன்னோம் தப்பா ஏதும் சொல்லிட்டமோ அதுக்கு ஏன் சிரிக்கிறாங்க என அமித்ஷா நிற்க மொழி பெயர்ப்பாளர் மாத்தி சொல்லியதை அறிந்து எப்பா நான் மோடிய சொன்னேன் என அவரிடம் கூற இப்படியே பேச்சு முழுவதும் ஒரே காமடியாக இருந்தது.
காங்கிரசை ஒரு வேலை செய்யாத ட்ரான்ஸ்ஃபாமர் ன்னு அமித்ஷா சொல்ல. மொழிபெயர்ப்பாளர் மோடி ஒரு ட்ரான்ஃபாமர் ன்னு சொல்ல காமடி தொடர்ந்தது.
ஒரு கட்டத்தில் அமித்ஷா பேசி முடிக்க மொழிபெயர்ப்பாளர் அப்படியே நிற்கின்றார். இதில் மொழிபெயர்ப்பாளரின் மைக் வேலை செய்யாமல் போக அமித்ஷா கடுப்பானார்.
பாஷ புரியாத ஊர்ல பிரச்சாரம் செய்வது எவ்வளவு கஷ்டமான வேலை என்பது இதிலிருந்து புரிய முடிகின்றது.
கிட்ட தட்ட 9 முறை இதே போன்று மாத்தி மாத்தி பேச மக்கள் சிரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் பிரதமர் மோடியை இந்தியாவின் பிரதமர் என்பதற்கு பதிலாக பாஜக பிரதமர் என அமித்ஷா கூறியதும் சர்ச்சையானது.
ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரை பிடிக்க முடியாத பாஜக அங்க ஆட்சியவா பிடிக்க போகுது என அங்கு நடந்த காமிடிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval