6-1-2019 ஞாயிறு அன்று சவுதியில் இருந்து சென்னை விமானநிலையம் வந்தார் ஆடுதுறையை சேர்ந்த கமால் என்பவர், (எனது மாமா.)வர் வரும் போது எல்லோரும் போல அவரும் கைபேக் வைத்திருந்தார், அதில் பாஸ்போர்ட், ரிட்டன் டிக்கெட், இந்திய ரூபாய் 19000 ஆயிரம், சவுதி ரியால் 800,
மற்றும் ஒரு செல்போன் ஒரு வாட்ச் வைத்திருந்தார்.
தனது லக்கேஜ்யை எடுத்து வரும்போது ARRIVAL கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் உங்கள் பாஸ்போர்டை காட்டுங்கள் என்று கேட்டுள்ளார் அவரும் தனது கைபேக்கை திறந்து பாஸ்போர்ட்டை எடுத்து கொடுத்துவிட்டு லக்கேஜ்வைக்கும் 'டிராலி' மேலே கைபேக்கை வைத்துள்ளார். பாஸ்போர்டை சோதனை செய்து திரும்ப கொடுத்துள்ளார், இந்த சிறிய நேரத்தில் கைபேக்கை யாரோ எடுத்துவிட்டார்கள். (இந்த சம்பவம் நடப்பது ஏர்போர்ட் உள்ளேயே.) கைப்பேக்கை காணவில்லை என்று தேடி பார்த்த போது கிடைக்கவில்லை, பாஸ்போர்ரட்டை வாங்கி பார்த்த கஸ்டம்ஸ்அதிகாரிகள் அனைவரும் வெள்ளை உடையில் இருந்தினால் யார் வாங்கி செக் பண்ணினார் என்றும் அவருக்கு புரியவில்லை. அவரும் ரொம்ப நேரம் தேடியும் உள்ளே இருக்கும் அதிகாரிகளிடமும் விசாரித்தும் பார்த்தார் கிடைக்கவில்லை. உங்கள் கைபேக்கை நீங்கதான் பத்திரமா பார்த்துகனும் நாங்க பொருப்பல்ல என்று சொல்லி வெளியே அனுப்பி விட்டார்கள்.
பிறகு நானும் அவரும் விமான ஆபிஸ்ல் சொன்னோம் அவர்கள் ஏர்போர்ட் மேனேஜரிடம் போய் சொல்லுங்க என்றார்கள் . டெர்மனல் 4 ல் உள்ள மேனேஜர் ஆபிஸ் போய் புகார் கொடுத்தோம். அதற்க்கு மேனேஜர் அலட்சிமான பதில் கொடுத்தார் அதிகமாக கைபேக் மற்றும் செல்போன்கள் காணாமல் போகிறது அதற்க்கு நாங்க என்னா பண்ண முடியும் யாரும் கொண்டு வந்து கொடுத்தால் தருகிறோம் ஆகையால் ஏர்போர்ட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திட்டு போங்க என்று சொன்னார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போனால் காவல்நிலையத்தில் சொல்கிறார்கள் ஏர்போர்ட் உள்ளே சம்பவம் நடந்தால் ஏர்போர்ட் மேனேஜர்தான் பொருப்பு வெளியே நடந்தால்தான் நாங்க புகார் வாங்க முடியும் சரி இருந்தாலும் உங்க அட்ரஸ் போன் நம்பரை நோட்டில் எழுதி வைத்திட்டு போங்க என்றார்கள். எழுதி கொடுத்திட்டு வருத்த்தோடு ஊருக்கு புறப்பட்டு போனோம்.
பிறகு என் கைபேசிக்கு போன் வந்தது
உங்க கைபேக் கிடைத்து விட்டது வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று மறுநாளே புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்று மேனேஜரிடம் கேட்டோம் பேக் கிடைத்துவிட்டது வந்து வாங்கி செல்லுங்கள் என்னு போன் பன்னுனீங்களேன்னு அவர் நாங்க பண்ணலையே என்றார் அந்த நம்பர்க்கு மேனேஜர் அறையில் இருந்தே கால் பண்ணினோம் போனை எடுத்தவர் கஸ்டம்ஸ்அதிகாரி (போட்டோவில் இருப்பவர், இவர் பெயர் கிருஷ்ண குமார்) எனக்கு இன்று டூட்டி இல்லை அதனால் உங்க பேக்கை அண்ணாநகரில் உள்ள என் வீட்டில் வைத்துள்ளேன் நீங்க அண்ணாநகர் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னார். நான் விபரத்தை மேனேஜரிடம் சொன்னேன் அதற்க்கு அவர் ஏர்போர்டில் காணாமல் போன பொருளை எங்களிடம் ஒப்படைக்காமல் இவர் ஏன் வீட்டுக்கு எடுத்து போனார் !? நீங்கள் அங்கே போக வேண்டாம் அவரை ஏர்போர்டிலையே வந்து கொடுக்க சொல்லுங்கள் மற்றதை நாங்கள் பாத்துகிறோம் என்றார், சரி என்று நாங்கள் அண்ணாநகர் வர முடியாது என்று சொன்ன பிறகு மறுநாள் வந்து நான் டூட்டிக்கு வந்த பிறகு வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். மீண்டும் ஊர் வந்து மறுநாள் அவர் டூட்டிக்கு வந்த பிறகு போனோம், Arrival செக்குரீட்டியிடம் சொல்லிவிட்டு உள்ளே அழைத்து போய் கைபேக்கை கொடுத்தார். ஆனால் சவுதி ரியால் 500 எடுத்துக்கொண்டு பாக்கியை கொடுத்துவிட்டார். இதுதான் உள்ளே இருந்தது வேற எதுவும் எனக்கு தெரியாது என்று இந்த கிருஷ்ணகுமார் சொல்லி பேக்கை கொடுத்திவிட்டார். மீண்டும் ஏர்போர்ட் மேனேஜரிடம் போய் சொன்னபோது பாக்கி பணம் கிடைத்ததுவரை சந்தோசப்படுங்கள் கிளம்பி போங்கள் என்று சொல்லி விட்டார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு முறை சென்னைக்கு அழைந்ததும் சவுதி பணம் 500 ரியால் போனதும்தான் மிச்சம்.

நான் விசாரித்தவரை ஏர்போர்ட் உள்ளே பனிபுரியும் சிலர் கூட்டாக சேர்ந்து தனியாக வரும் பயணிகளிடம் அதுவும் விபரம் இல்லாதவர்கள், வயதானவர்களிடம் பாஸ்போர்ட்டை காட்ட சொல்லி அவர்களின் கவனத்தை திசைதிருப்பி பயணிகளின் செல்போன், கைப்பேக் போன்றவைகளை எடுத்துவிடுகிறார்கள். பயணிகள் பயப்படாமல் புகார் கொடுத்தால் மட்டுமே திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு.
விபரம் தெரியாமல் புகார் கொடுக்காமல் போனவர் எத்தனை பேரோ !?.
நாங்கள் புகார் கொடுக்கவில்லை என்றால் எங்களுக்கும் கிடைத்து இருக்காது.
அடுத்து ஏர்போர்டில் காணாமல் போன கைபேக்கை கஷ்டம்ஸ் அதிகாரியாக பனிபுரியும் இந்த கிருஷ்ணகுமார் ஏன் வீட்டிர்க்கு எடுத்து செல்ல வேண்டும் ?

ஆகையால் வெளிநாட்டில் இருந்து ஊர் வரும் சகோதரர்கள் ஏர்போர்ட்டில் தாங்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் கைபேக்கை பத்திரமாக கவனமாக பார்த்துக்கொள்ளவும்.
இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும்.
இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval