இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
போலீஸ் பிடித்த பயத்தில் தன் உயிரை விட்ட அப்துல் ரஷீத்!
சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள பத்ஹா நெஸ்டோவுக்கு கீழ் தளத்தில் வாட்ச் கடை வைத்திருந்தவர் அப்துல் ரஷீத். மலப்புரம் வண்டூர் கிராமத்தை சேர்ந்தவர்.
தற்போது சவுதி முழுக்க அந்நாட்டு மக்களையே பணியில் அமர்த்த வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் வாட்ச் கடைகளும் வருகிறது. எனவே கைக்கடிகார கடைகளில் வெளி நாட்டவர் வேலை செய்யக் கூடாது. இது தெரிந்தும் வேறு வழியில்லாமல் வேலை செய்து வந்துள்ளார். நேற்று (20-01-2018)மதியம் இரண்டு மணி அளவில் காவல் துறை ரெய்டு வந்துள்ளது. ரெய்டில் ரஷீது மாட்டிக் கொண்டார். போலீஸ் வண்டியிலும் ஏற்றப்பட்டார். இது அவருக்கு புது அனுபவம் என்பதால் மன உளைச்சலால் மாரடைப்பு வந்துள்ளது. அதற்குள் அவரது ஸ்பான்ஸர் வந்து விடவே சமரசம் பேசி ரஷீதை இறக்கி விட்டுள்ளனர். திரும்பவும் நெஞ்சு வலிக்கிறது என்று சொல்லவே அவரது ஸ்பான்ஸர் அவரை மருத்துவ மனை அழைத்து சென்றுள்ளார். மருத்துவ மனை சென்ற சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. காவல் துறையினரின் வண்டியில் முதன் முதலாக ஏறியதால் பயத்தில் அவருக்கு மாரடைப்பு வந்துள்ளதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். தற்போது சுமைஸி மருத்துவ மனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பச் செல்ல வேண்டியவர்கள் நாம்)
വണ്ടൂർ പഴയ ചന്തകുന്ന്
താമസിക്കുന്ന തട്ടാരക്കാടൻ അസിസാ ക്കാന്റെ മകൻ റഷീദ് എന്ന
മാനു റിയാദിൽ വെച്ച് ഹൃദയാഘാതം മൂലം മരണപ്പെട്ടു.
താമസിക്കുന്ന തട്ടാരക്കാടൻ അസിസാ ക്കാന്റെ മകൻ റഷീദ് എന്ന
മാനു റിയാദിൽ വെച്ച് ഹൃദയാഘാതം മൂലം മരണപ്പെട്ടു.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval