இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, டெல்லி செங்கோட்டையில் முதன் முதலாக நமது தேசிய கொடியை ஏற்றி சிறப்பு செய்தவர் - ஒரு முஸ்லீம் என்பது - நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...!!
ஆம்... அந்த மாமனிதர் தான்
ஷா நாவாஸ் கான்..!!
வங்கத்து சிங்கம் சுபாஷ் சந்திர போஸின் விடுதலை படையில் மேஜர் ஜென்ரலாக இருந்தவர் இவர். நேதாஜி படையில் இருந்து களம் பல கண்டவர். வீர வரலாறுக்கு சொந்தக்காரர்...
ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு டெல்லி செங்கோட்டையிலேயே விசாரணை கைதியாக சிறை வைக்கப்பட்டவர். 1945 ல் சிறை மீண்ட பின் - காந்திஜி மற்றும் பண்டிட் நேருஜியை சந்தித்து, தன்னை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக்கொண்டார்...
காங்கிரஸ் சேவாதள முதல் தலைவராக நியமிக்கப் பட்ட போராளி இவர்தான். பின்னர் , நாடாளுமன்ற பதவியும் தேடிவந்தது - மீரட் தொகுதியிலிருந்து...
இவரைப்பற்றி எழுதிடலாம் - நம் இரத்தமெல்லாம் சூடேறும் வரை...
ஆம். அத்தகைய தொண்டுகளுக்கு உரியவர் இவர். இந்தியாவின் முதல் மூன்று பிரதமர்களும், இவருக்கு மரியாதை செய்த பின்னரே - சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசிய கொடியேற்றும் வழக்கத்தை கடைப்பிடித்தனர் என்பதிலிருந்தே நாம் உணர்ந்திடுவோம் - இவர் நாட்டுக்களித்த சீரிய சிறப்பு மிகு சேவையை...
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval