கோடாரி தைலம் இந்த பெயரை தெரியாமல் அல்லது தமிழகத்தில் இது இல்லாத வீடு இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பெயர் பெற்றது.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் இதை வாங்காமல் வர மாட்டார்கள்.
1928 ம் ஆண்டு அதன் நிறுவனர் Leung Yun Chee சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்தார்.
Leung மேலாளராக Shanghai silk trading நிறுவனத்தில் வேலை செய்தார், மூன்று வருடங்களுக்கு பிறகு சொந்த நிறுவனம் தொடங்க முடிவு செய்தார்.
அப்போது ஜெர்மானிய மருத்துவர் Dr.Schmeidler என்பவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
அவர் கொடுத்த தைலம் குறிப்புகளை கொண்டே Axe Oil நிறுவனம் தொடங்க காரணமாக இருந்தது.
1930ம் ஆண்டு இந்த தைலம் அனைவராலும் அங்கீகரிக்கப்படவில்லை.ஹாங்காங் மற்றும் சீனா நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டிருந்தது.
அப்போது தன்னுடை தைலத்தின் Logo வை மாற்றினார்.பிறகு துண்டு சீட்டின் மூலம் தைலத்தின் பயன்களை விவரித்து சிங்கப்பூர் முழுவதும் விநியோகம் செய்தார்.
1950-1970 சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் ஹஜ் புனித பயணம் செய்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் தலைவலி,மயக்கம்,பூச்சுக்கடி போன்றவற்றிற்கு அதிகம் பேர் பயன்படுத்தினார்கள். இதன் விளைவாக வியாபாரம் அதிகரித்தது.
இவருடைய முதல் வெளிநாட்டு சந்தை சவூதி அரேபியாவாக இருந்தது.
1971 ஆண்டு நிறுவனர் இறந்தபின் அவருடைய மூத்தமகன் பொறுப்பேற்றார்.
இன்று ஆசியாவில் சிறந்த தைலமாகவும். சிங்கப்பூரின் Heritage Brand in Singapore , ஆகவும் இருக்கிறது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval